Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரட்சிதா புடவை கட்டி இருப்பதை குறித்து "உருவ கேலி” செய்த ஜனனி.. பதிலடி கொடுத்த ரட்சிதாவின் கணவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் ரட்சிதா புடவை கட்டி இருப்பதை குறித்து ஜனனி உருவக் கேலி செய்து இருக்கிறார் .அதை குறித்து நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வரும் நிலையில் ரட்சிதாவின் கணவரும் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தான் புடவை கட்டி இருப்பதை குறித்து மைனா புகழ்ந்து பேசாததால், "ரட்சிதா புடவை கட்டியிருப்பது எருமை மாட்டுக்கு புடவை கட்டியது போல இருக்கிறது" என்று ஜனனி பேசிய வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் போட்டி போட்ட ரசிகர்கள்

ஆரம்பத்தில் போட்டி போட்ட ரசிகர்கள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி யில் பல்வேறு துறையில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் இலங்கை செய்தி வாசிப்பாளராக ஜனனியும் கலந்து கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறைவான வயதுடைய பெண் ஜனனி தான் இவர் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமான முதல் நாளே இவருக்கு அளவுக்கு அதிகமான ரசிகர்கள் பேன்ஸ் பேஜ்களை தொடங்கியிருந்தனர். ஏற்கனவே கடந்த சீசனில் கலந்து கொண்டிருந்த லாஸ்ட்லியா போல இவருக்கும் அதிகமான ரசிகர்கள் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு சில வாரங்களில் இவருடைய விளையாட்டு வேறு விதமாக போய்விட்டது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். அதிகமாக அமுதவாணனோடு பழகி வந்து அமுதவணனுக்கு பிடிக்காதவர்களோடு இவரும் முகத்தை திருப்பிக் கொண்டு சண்டை போட்டது முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது என்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.

உருவ கேலிரட்சிதாவை புகழ்ந்த மைனா

உருவ கேலிரட்சிதாவை புகழ்ந்த மைனா

இதைத்தொடர்ந்து கடந்த வாரம் என்னுடைய தமிழை குறை சொல்லிவிட்டார் என்று விக்ரமன் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். ஆனால் விக்ரமன் பேசியது சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் என்று அப்போதும் ரசிகர்கள் பலர் குறும்படங்களை வெளியிட்டு வந்தனர். இதனாலே தொடர்ந்து ஜனனியின் பெயர் இறங்கி வரும் நிலையில், நேற்றைய எபிசோட்டில் அவர் புடவை அணிந்து புடவை நன்றாக இருக்கிறதா என்று ராம், அமுதவாணன் இருக்கும்போது கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் அனைவரும் ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளினார். அந்த இடத்தை விட்டு வந்த பிறகு தன்னுடைய புடவையை சரி செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது மைனா ரட்சிதாவை பார்த்து உனக்கு தான் புடவை நன்றாக இருக்கிறது என்று கூறினாராம்.

உருவ கேலி

உருவ கேலி

இதை ஏற்றுக் கொள்ள முடியாத ஜனனி, நேற்று ஜனனி மட்டுமல்லாமல் தனலட்சுமி புடவை கட்டியிருந்தார் அதனால் சாப்பிடும் போது தனலட்சுமி இடம் "அதுக்கு" புடவை நல்லாவா இருக்கு? என்று கேட்க தனலட்சுமி யாரை சொல்கிறாய் என்று கேட்டதற்கு, ரட்சிதாவை தான்.மைனா அவருக்குத்தான் நன்றாக இருக்கிறது என்று என்னை பார்த்தபடியே என்னை கோபமூட்டுவதாக சொல்கிறார் என்று சொன்னதும், அவளுக்கும் நன்றாகத் தான் இருக்கிறது என்று தனலட்சுமி கூறுகிறார். எங்க நல்லா இருக்கு "எருமை மாட்டுக்கு புடவை கட்டின மாதிரி இருக்கு" என்று நக்கல் செய்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

தினேஷ் கொடுத்த பதிலடி

தினேஷ் கொடுத்த பதிலடி

இந்த நிலையில் ரட்சிதாவின் கணவர் தினேஷ் இன்று தன்னுடைய ஓட்டு யாருக்கு என்பதை குறித்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஜனனி மற்றும் மைனா நந்தினி புகைப்படத்தை மற்றும் எக்ஸ் மார்க் கொடுத்து தவிர்த்து இருக்கிறார்.அதோடு அந்த பதிவிற்கு, "தேவையற்ற கதைகள், மற்றும் பழி வாங்குபவர்கள் விசுவாசம் மற்ற நண்பர்கள் இவர்களை தவிர்க்க வேண்டும்" என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் ஏற்கனவே மைனா நந்தினியும் ராபர்ட் மாஸ்டரும் இல்லை என்றால் ரட்சிதா பைனல் வரைக்கும் செல்வார் என்று தினேஷ் கூறியிருந்தார் .ஆனால் நேற்று ஜனனி ரட்சிதாவை குறித்து பேசியதை குறித்து தான் மைனா உடன் ஜனனியையும் தினேஷ் சேர்த்திருக்கிறார் என்று புரிந்து கொண்டாலும் ரட்சிதாவை குறித்து ஜனனி இப்படி பேசியது தவறு தான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+