கணவரைப் பற்றி கருத்து சொன்ன ராதாரவி குறித்து ராஜலட்சுமி கூறிய பதில்..இவர்களுக்குள் இப்படி ஒரு உறவா?
சென்னை: பாடகி ராஜலட்சுமி தற்போது லைசன்ஸ் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
லைசென்ஸ் திரைப்படத்தில் நடிகர் ராதாரவி முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகர் ராதாரவி சில நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமியிடம் சூட்டிங்கிற்கு உன்னுடைய கணவரை கூட்டிக்கொண்டு வராதே என்று கூறியிருந்தார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் ராதாரவி தன்னுடைய கணவரை பற்றி கூறிய கருத்துக்கு முதல் முறையாக பாடகி ராஜலட்சுமி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகம்
மக்கள் இசை பாடகியாக இருந்த ராஜலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக ராஜலட்சுமி அவருடைய கணவரும் ஜோடியாக கலந்து கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்களையும் தங்களுடைய பாடல்களின் மூலமாக ஈர்த்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பாடல்களின் மூலமாக மட்டுமல்லாமல் தன்னுடைய கலகலப்பான பேச்சு மூலமாகவும் ராஜலட்சுமி ரசிகர்களிடம் கவர்ந்திருந்தார். அடிமட்டத்திலிருந்து போராடி பல்வேறு வெற்றிகளை பெற்று தற்போது பல முன்னணி திரைப்படங்களில் பின்னணி பாடகி ஆகவும் ராஜலட்சுமி இருந்து வருகிறார்.

லைசன்ஸ் திரைப்பட கதாநாயகி
கிராமங்களில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேடை பாடல்கள் பாடிவரும் ராஜலட்சுமி யும் அவருடைய கணவரும் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ராஜலட்சுமி லைசென்ஸ் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் செய்தி வெளியாகியிருந்தது. ராஜலட்சுமி யின் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியானதும் ராஜலட்சுமிக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைத்து தரப்பட்ட வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. ஆனால் அந்த திரைப்படத்தின் போஸ்டரில் கம்பீரமாக போஸ் கொடுத்திருக்கும் காட்சியை ராஜலட்சுமி இவ்வளவு அழகாக வரும் என்று எதிர்பார்க்கவில்லையே அப்போது பல போட்டோக்கள் எடுத்ததில் இந்த போட்டோவை செலக்ட் செய்து இருக்கிறார்களாம்.

நடிகர் ராதாரவி பேசிய வார்த்தை
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ராதாரவி ராஜலட்சுமியிடம் உன்னுடைய கணவரை சூட்டிங் கூட்டிக் கொண்டு வராதே என்று கூறியிருந்தார். இது பல்வேறு வகையான கருத்துக்களை பெற்று வருகிறது, பாடகியாக இருந்து ஒரு பெண் கஷ்டப்பட்டு வளர்ந்து வரும் நிலையில் அவருடைய கணவரை பற்றி பொதுவெளியில் நடிகர் ராதாரவி இப்படி பேசலாமா? என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பியிருந்தனர். அதைப் பற்றி முதல் முறையாக ராஜலட்சுமி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ராஜலட்சுமியின் விளக்கம்
நடிகர் ராதாரவி எவ்வளவோ பெரிய நடிகர் அவர் எனக்கு ஒரு அப்பா ஸ்தானத்தில் தான் இருந்து வருகிறார். அவர் தான் நடிக்கும் லைசன்ஸ் திரைப்படத்திலும் எனக்கு அப்பாவாக நடிக்கிறார். அவர் சூட்டிங் ஸ்பாட்டில் கூட எப்போதும் ஜாலியாகத்தான் பேசிக் கொண்டிருப்பார் .கதாநாயகி மேடம் வந்துட்டாங்க ,அவர்களுக்கு ஜூஸ் கொடுங்க, ஷேர் எடுத்து போடுங்க என்று எப்போதும் கிண்டல் செய்து கொண்டே இருப்பார். அது போல தான் அப்போது கூட அப்படி பேசி இருந்தார். அவர் அப்படி ஜாலியாக பேசிக் கொண்டிருப்பதால் தான் எனக்கும் கூட அவரோடு நடிப்பதில் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் இருக்கிறது. அதனால் அவர் பேசியதை நானும் என் கணவரும் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சமூக வலைத்தளத்தில் தான் பெரிய கண்டண்ட் பொருளாக அது மாறி இருந்தது. எனக்கும் நடிகர் ராதாரவிக்கும் ஒரு அப்பா மகள் உறவு இருக்கிறது. நான் நடிக்கும் போது எனக்கு பல்வேறு விஷயங்களை சொல்லிக் கொடுப்பார் என்று ராஜலட்சுமி கூறியிருக்கிறார்.
-
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
"குடும்ப வாழ்க்கை” மொத்த சர்ச்சைகளுக்கும் போல்டாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுகன்யா.. பாராட்டும் ரசிகர்கள் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
திரிஷா பிரண்ட் நடிகை சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க! எச்சரித்த விஜய் சேதுபதி! பின்னணி காரணம் -
"29 வயசுல உங்களுக்கு இந்த ஃபீலிங் வந்திருக்கா? Netflix-ல் டிரெண்டாகும் ‘29’ படம் ஏன் இளைஞர்களின் மனசை கலக்குது!" -
மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி -
100ஐ தொடாமல் போன சூப்பர் குட் பிலிம்ஸ் RB சௌத்ரி.. காற்றில் கரைந்த ரியல் ஜென்டில்மேனின் கடைசி ஆசை -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications