இந்த இளம் நடிகை தான் என் மனதை கவர்ந்தவர்... அதற்கான காரணம் குறித்து வெளிப்படையாக பேசிய ராமராஜன்
சென்னை: 80ஸ்களில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருந்த ராமராஜன் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரைத்துறைக்கு வந்த நடிகர் ராமராஜன் தன்னுடைய மனதை கவர்ந்த நடிகையைப் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
சமீபத்தில் உள்ள இளம் கதாநாயகிகளில் தன்னுடைய மனதை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ் என்று ராமராஜன் கூறியிருக்கிறார் அதற்கான காரணம் தான் வேற லெவல் இருக்கிறது.

ராமராஜனின் ஆரம்ப காலம்
1977 ஆம் ஆண்டு தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ராமராஜன் ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன வருடங்களில் தான் நடித்திருக்கிறார். மண்ணுக்கேத்த பொண்ணு என்னும் திரைப்படத்தில் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஒரு சில திரைப்படங்களில் ராமராஜன் நடித்துக் கொண்டிருக்கும் போது பெரிய அளவில் இவருக்கு அறிமுகத்தையும், ரசிகர்களையும் கொடுத்தது கரகாட்டம் திரைப்படம் தான். இந்த திரைப்படம் 25 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேலே ஓடியது. ஏழு எட்டு தியேட்டர்களில் ஒரு வருடத்திற்கு மேலே ஓடி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் 4 திரையரங்குகளில் 400 நாட்கள் ஓடி இருக்கிறது. கரகாட்டக்காரன் திரைப்படம் ராமராஜனுக்கு 18 வது திரைப்படம் தான்.

எந்த நிலையிலும் கதாநாயகன்
ஆரம்ப காலகட்டத்தில் பக்கத்து வீட்டு பையன் போல யதார்த்தமான தன்னுடைய நடிப்பை நடித்து வந்த ராமராஜன் அப்போது நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடன் இவருடைய திரைப்படங்களும் அடிக்கடி போட்டி போட்டுக் கொண்டிருக்கும் .அரை டவுசர் போட்டு கொண்டு நடித்தாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்த கதாநாயகனாக அப்ப மட்டும் அல்லாமல் இப்ப வரைக்கும் ராமராஜன் இருந்து வருகிறார். இவருடைய எதார்த்தமான நடிப்பு இவர் நடிக்கும் பல படங்களில் இவருக்கு வெற்றியை கொடுத்துக் கொண்டிருந்தது.

மீண்டும் கதாநாயகன்
திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது உச்ச நிலையில் இருந்த ராமராஜன் ஒரு சில வருடங்களாக திரைப்பட நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு 2012 இல் மேதை திரைப்படத்தில் இவர் நடித்தார். இந்த திரைப்படம் இவர் எதிர்பார்த்த அளவில் இவருக்கு வெற்றியை கொடுக்காமல் தோல்வியடைந்து விட்டது. அதற்கு பிறகு தற்போது சாமானியன் என்ற தலைப்பில் மூன்று கதாநாயகர்களின் ஒருவராக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் தற்போதைய இளம் கதாநாயகி ஒருவரை பற்றி பேசியது ரசிகர்களின் மத்தியில் வியப்பை கொடுத்து இருக்கிறது.

பிடித்த கதாநாயகி
இப்ப இருக்கிற நடிகைகள் எல்லோருமே நன்றாகத்தான் நடிக்கிறார்கள். சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் பல நடிகர்களும், நடிகைகளும் கஷ்டங்களை அனுபவித்து தான் ஒரு நல்ல நிலைக்கு வந்து நிற்கிறார்கள். அந்த காலத்து ஹீரோயின்களில் சரோஜாதேவி, சாவித்திரி, கே. ஆர் விஜயா போன்ற பலரும் தனக்கு பிடிக்கும் என்றும் அந்த வரிசையில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் என்னுடைய மனதில் நிற்கிறார் அதற்கு காரணம் என்னவென்றால் நடிகையர் திலகம் படத்தில் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் அந்த படத்தை பார்த்ததிலிருந்து கீர்த்தி சுரேஷை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். ராமராஜரின் இந்த கருத்திற்கு பல தரப்பட்ட ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பிரேம்ஜியுடன் காதலா? 40 வயது வரை அவர் கல்யாணம் பண்ணாத காரணம்.. ஓபனாக பேசிய சோனா! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications