என்னுடைய ஓட்டு இவருக்குத்தான்.. ரட்சிதாவின் கணவரை தொடர்ந்து ஓப்பனாக பதிவிட்ட ராபர்ட்..மாறவே இல்லையே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என்னுடைய ஓட்டு இவருக்கு தான் என ராபர்ட் மாஸ்டர் ஓபனாக ஸ்கிரீன்ஷாட் எடுத்து ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

குயின்சிக்கு ஆதரவு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் வாக்கு எண்ணிக்கையில் குறைவாக இருந்த ராபர்ட் மாஸ்டர் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இவர் எப்படியாவது இந்த முறை வெளியேற்றப்பட வேண்டும் என்று ரட்சிதாவின் ரசிகர்கள் பலர் கருத்து கூறி வந்தனர். கடைசியில் அதுவே நடந்து விட்டது .ஆனால் வெளியே வந்த பிறகு ரட்சிதா அதிகமாக பீல் பண்ணுவார் என்று நினைத்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர் பல்வேறு தகவல்களை கூறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போதே குயின்சிக்கு அதிகமாக ஆதரவு கொடுத்து வந்து கொண்டிருந்தார். தற்போது வெளியே வந்து அதே வேலையை தொடங்கி இருக்கிறார்.

குடும்பத்தினர் மீது பாசம்
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு ராபர்ட் மாஸ்டர் வந்ததும் முதல் நாளே அவரை வீட்டிற்கு சென்று அசல் சந்தித்து இருக்கிறார். எப்போதுமே தன்னுடைய ஆறுதல் என்னுடைய அம்மா அப்பா என்று பிக் பாஸ் வீட்டிற்குள் பலமுறை ராபர்ட் மாஸ்டர் கூறியிருக்கிறார் .அது போலவே ராபர்ட் மாஸ்டர் உடைய வருகையை அவருடைய குடும்பத்தினர் வெகு விமர்சனமாக வரவேற்று இருந்தனர். நண்பர்கள் குடும்பத்தினர் என பலரும் இருந்தாலும் தன்னுடைய அப்பாவை அவர் கட்டியணைத்து முத்தமிட்டபடி அனைவருக்கும் அறிமுகப்படுத்தி இருந்தார்.

ஓட்டு குயின்சிக்கு தான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதாவோடு அதிகமாக நெருக்கமாக பழகி வந்த ராபர்ட் மாஸ்டர் தனக்கு அதிகமாக உரிமை இருப்பதாகவும் அவர் பல நேரங்களில் நடந்து கொண்டார். அதே நேரத்தில் இந்த வீட்டிற்குள் தனக்கு அதிகமாக பிடித்தது குயின்சி தான் என்பதை பலமுறை கூறிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இந்த வாரத்தில் நாமினேஷன் வரிசையில் ரட்சிதா, கதிரவன் ,மைனா, குயின்சி, தனலட்சுமி, ஜனனி போன்றோர் இருக்கின்றனர். இதில் ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவுக்கு தான் ஆதரவு கொடுப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தன்னுடைய ஓட்டு குயின்சிக்கு தான் என்று தான் ஓட்டு போட்டதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ரசிகர்களோடு பகிர்ந்து "பட்டு குட்டிக்கு ஓட்டு போடுங்க" என்று வேண்டுகோளையும் வைத்திருக்கிறார்.

காப்பி அடிக்கப்பட்டு இருக்கிறதா
ஏற்கனவே ரட்சிதாவின் கணவரான தினேஷும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து ஒவ்வொரு வாரமும் தான் யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்பதை ரசிகர்களோடு பகிர்ந்து வருகிறார். தற்போது அதே பாணியை ராபர்ட் மாஸ்டரும் கையில் எடுத்து இருப்பதால் இதை குறித்து சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். ஒரு பக்கம் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டரை எப்படியாவது வெளியேற்றி விட வேண்டும் என்று தினேஷ் தன்னுடைய ஓட்டு ராமுக்கு தான் என்று கூறி ஓட்டு போட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு போட்டியாக ராபர்ட் மாஸ்டர் செயல்படுகிறார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுபோல இன்றும் கூட தினேஷ் தன்னுடைய ஓட்டு ரட்சிதாவுக்கு என்பதை பதிவிட்டு இருக்கிறார் அதைக் குறித்தும் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications