Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொந்த செலவில் சூனியம்? இர்ஃபானை காப்பாற்றி கொண்டிருக்கும் சக்திவாய்ந்த பெண் அரசியல்வாதி: பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டுக் கொள்வதற்காக வேட்டி சேலைகளை தந்தாரே தவிர, உண்மையான இறையருளோடு செய்யவில்லை.. வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியக்கூடாது என்ற முகம்மதுவின் சட்டத்தை இர்பான் கடைப்பிடிக்கவில்லை. இர்பானை பொறுத்தவரை மலிவான விளம்பரத்துக்காக தன்னை பயன்படுத்தி கொள்கிறார் என்பது இதன்மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று பத்திரிகையாளர் பாண்டியன் கடுமையாக சாடியிருக்கிறார்.

கையேந்தி பவன் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் வரை, அங்குள்ள சாப்பாடுகளை சாப்பிட்டு ரிவ்யூ தந்து, அதனை யூடியூபில் வெளியிட்டே பிரபலமானவர் இர்ஃபான். இந்த வீடியோக்களுக்கு பொதுமக்களின் ஆதரவு அபரிமிதமாக கிடைத்தது..

Television Irfan lady Politician

ஒருகட்டத்தில், அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை தன்னுடைய ஷோவிற்கு விருந்தினராக அழைத்து, அதனையும் வீடியோவாக பதிவிட்டார்.. இதனால் இர்பானின் புகழ் திடீரென உச்சம் தொட்டது.. இவரது திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

புகழின் உச்சம்

ஆனால் எந்த அளவுக்கு புகழின் உச்சத்திற்கு செல்கிறாரோ, அந்த அளவுக்கு விமர்சனங்களுக்கும் ஆளாகிவருகிறார்.. அப்படித்தான் நேற்றைய தினமும் சர்ச்சைகளுக்குள் சிக்கி கொண்டார்.

நேற்று ரம்ஜான் திருநாளன்று தனது மனைவியுடன் காரில் சென்று, ஏழைகளுக்கு உதவிப் பொருட்களை காருக்குள் இருந்துகொண்டே இர்ஃபான் வழங்கினார். அப்போது தங்களுக்கு உதவி கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் ஒருசிலர் முண்டியடித்துக் கொண்டு இர்ஃபானின் காருக்குள் கைகளை நீட்டினார்கள்.

அவர்களிடம் இர்பான் கடுமையாக பேசியதோடு, அவர்களை அவமதித்து பேசியுள்ளார். ஈகைத் திருநாளில் ஈகை செய்வதை இஸ்லாமிய பெருமக்கள் மிக முக்கியமாக கருதும் வேளையில், இர்ஃபானின் இந்த செயல் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கிவிட்டது.. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை வலுவாக தெரிவித்தார்கள்..

ஒரே நாளில் விமர்சனங்கள்

ஒரேநாளில் இர்பானுக்கு நாலாபுறமிருந்தும் விமர்சனங்கள் பெருகின.. இதை இர்பானே எதிர்பார்க்கவில்லை.. இதையடுத்து, தன்னுடைய செயலுக்கு வருந்துவதாக உடனே தெரிவித்தார்..

"முன்னேற்பாடுகள் ஏதும் இல்லாமல் மனைவியுடன் காரில் சென்று உதவி செய்ததால் சூழலை கையாளத் தெரியவில்லை.. அதனால் திணறி சில விஷயங்கள் செய்துவிட்டேன். மனம் வருந்துகிறேன்.. கஷ்டப்படுகிறவர்கள் மேல் அக்கறை இல்லை என சிலர் சொல்கிறார்கள், அப்படியல்ல, நானும் அங்கிருந்து வந்தவன்தான்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "இர்ஃபானை பொறுத்தவரை, வெகுஜன மககளின் உள்ளுணர்வுகளை என்றுமே புரிந்து கொள்ளாத ஒரு நபர்.. ஒருமுறை திருச்சியிலிருந்து அவரே காரை ஓட்டிட்டு வருகிறார்.. சென்னைக்குள் நுழையும்போது, ஒரு கையில் கார் ஓட்டிக் கொண்டே, இன்னொரு கையில் வீடியோ எடுத்துட்டு வர்றார்.

ஸ்பாட்டிலேயே காலி

அப்போது, ஒரு கல்லூரியின் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் மூதாட்டி மீது இர்பானின் கார் மோதிவிடுகிறது.. அந்த மூதாட்டி ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டார்.. அந்தம்மா இறந்துபோனதுமே, உடனடியாக வேண்டப்பட்ட பிரபல அரசியல்வாதிகளுக்கு போன் போகிறது.. பிறகு, ஒரு போலீஸ்காரர் ஸ்பாட்டுக்கு வந்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களிலுள்ள தடயங்களை அழித்துவிட்டார்..
இர்ஃபானை காப்பாற்றுவதற்காக இப்படி செய்தார்கள். இதற்கெல்லாம் காரணம், ஆளும் கட்சியில் உள்ள சக்திவாய்ந்த பெண்மணியின் ஆதரவுதான்.

திடீர்னு நினைச்சால் அமெரிக்கா போவார் இர்ஃபான்.. நெப்போலியன் குடும்பத்துடன் இருப்பார்.. பிறகு லண்டன் போவார்.. இதுதான் இர்பானின் லைஃப்ஸ்டைல். பல லட்சம் வருமானம் கொட்டுகிறது அவருக்கு.

ஒரு கடையை ரிவ்யூ எடுக்க சென்றால், காசுக்காக நல்ல கடையை கெட்ட கடை என்பார், கெட்ட கடையை நல்ல கடை என்பார்.. பிளாக்மெயில் ஜர்னலிஸம்தான் இர்பானின் தொழில். இவர் நல்லாயிருக்குனு ரிவ்யூ சொன்ன பல பிரியாணிகளில் புழு நெளிஞ்சிருக்கு.. பழைய இறைச்சியை பயன்படுத்தி பிரியாணி சமைத்ததற்காக சம்பந்தப்பட்ட அந்த கடைக்கு மாநகராட்சி, பூட்டி சீல் வைத்தது. ஆனாலும் இர்பான் அந்த கடைக்கு விளம்பரம் செய்றாரு.

கருக்கலைப்பு தடை

முழுக்க முழுக்க சர்சைக்குள்ளான நபர் இர்பான்.. கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா? என்று துபாயில் சென்று டெஸ்ட் எடுத்து, தவறாக வழிகாட்டுகிறார்.. இவர் ஒரு முகம்மதியர்.. கர்ப்ப தடையோ, கருக்கலைப்போ செய்யக்கூடாது என்கிறார் நபிகள் நாயகம்.
ஆனால், இந்தியாவில் கருக்கலைப்புக்கு தடை என்பதால், துபாயில் சென்று கருவை பார்த்து, கருவை கலைத்துவிடலாம் என்ற புதிய வழியை காட்டிவிடுகிறார்.

அதேபோல, தமிழகத்தில் மருத்துவமனையில் மனைவியின் பிரசவம் நடந்தபோது, அந்த அறைக்குள் சென்று, கத்தரிகோல் எடுத்து குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்துவிட்டார்.. எம்பிபிஎஸ், எம்டி செய்யக்கூடிய வேலையை, இர்பான் செய்தார்.. இதற்கு நியாயமாக பார்த்தால், அந்த மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். மருத்துவக் குழுவினரை குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும். மருத்துவமனையை பூட்டி சீல் வைத்திருக்க வேண்டும். ஆனால் ஆளுங்கட்சி தயவில் இதிலிருந்தும் தப்பித்து கொண்டார் இர்பான்.

திமுக ஆதரவு - சிறுபான்மையினர் ஓட்டுக்கள்

தன்னுடைய சிறுபான்மையினர் வாக்குகளை திமுகவுக்கு திருப்புவதற்கான வேலை செய்தார் என்பதற்காக, இர்பான்மீது எந்த வழக்கையும் மா.சுப்ரமணியம், போடவில்லை.. அந்த மருத்துவமனையும் தற்போதுவரை இயங்கி கொண்டுதான் இருக்கிறது.

இலவசமாக எது தந்தாலும், ஏழை எளிய மக்கள் முண்டியடித்து வாங்கத்தான் செய்வார்கள்.. வெள்ள நிவாரண நிதி வரும்போது, இலவச பொருட்களை வாங்க செல்வோர்கள் 10 பேர் நசுங்கி இறந்தே விட்டார்கள்.. தலித் மக்களை இந்த அரசு இப்படித்தான் வைத்திருக்கிறது. தலித் தலைவர்களும் அப்படித்தான் மக்களை வைத்திருக்கிறார்கள்.. அடிப்படை கல்வி இதுவரை போய் சேராத ஒரே சமூகம் தலித் சமூகம்தான்..

மலிவான விளம்பரம்

இர்பான் மலிவான விளம்பரத்துக்காக தலித் மக்களுக்கு வேட்டி,சேலை தருவதை போல நடிக்கிறார். நிஜமாகவே ஏழைகளுக்கு உதவுவதாக இருந்தால், தலித் காலனிக்குள் நுழைந்து, அங்கு எத்தனை பேர் வசித்து வருகிறார்கள் என்பதை கணக்கெடுத்து, அங்குள்ள தலித் தலைவரை அழைத்து, தன்னிடம் உள்ள பொருட்களை தந்து மக்களுக்கு விநியோகிக்க சொல்லியிருக்க வேண்டும். இதுதான் தானம் செய்வது. இதுதான் நபிகள் நாயகம் வழி.

வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டுக் கொள்வதற்காக வேட்டி சேலைகளை தந்தாரே தவிர, உண்மையான இறையருளோடு செய்யவில்லை.. வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியக்கூடாது என்ற முகம்மதுவின் சட்டத்தை இர்பான் கடைப்பிடிக்கவில்லை. இர்பானை பொறுத்தவரை மலிவான விளம்பரத்துக்காக தன்னை பயன்படுத்தி கொள்கிறார் என்பது இதன்மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது..

பணத்திமிர், புகழ் திமிர், செல்வாக்கு திமிர் இர்பானுக்கு உள்ளது.. இதற்கெல்லாம் கூடிய சீக்கிரம் இர்ஃபான் பதில் சொல்லியாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+