மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிய மகாலட்சுமி.. இவ்வளவு நாட்களுக்குள் இப்படியா?
சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்த சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தற்போது செய்த செயல் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தயாரிப்பாளர் ரவீந்திரனுடன் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி மீண்டும் தன்னுடைய பழைய வேலையை செய்து வருகிறார்.

ரெஸ்ட் கொடுத்த இணையவாசிகள்
ஒரு சில மாதங்களாகவே சமூக வலைத்தளத்தை எந்த பக்கம் திருப்பினாலும் அதில் தவறாமல் இடம் பிடித்து வந்த சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தற்போது தான் அதிலிருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திருக்கிறார் போல. இந்த நிலையில் மகாலட்சுமி வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.

இணையதளத்தில் பிரபலம் தான்
ஏற்கனவே முதல் திருமணத்தில் மகாலட்சுமிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் பல்வேறு சர்ச்சைகளை சிக்கி அடிக்கடி சமூக வலைத்தளத்தில் இவருடைய பெயர் இடம் பிடித்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தங்களுடைய இரண்டாவது திருமணத்தை மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் எளிமையான முறையில் செய்து முடித்து இருந்தனர்.ஆனால் அவர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர்களுடைய திருமண செய்தி சமூக வலைத்தளத்தை பலரையும் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு நெட்டிசன்கள் இவருடைய திருமண புகைப்படங்களை வைத்து கலாய்த்தும் வாழ்த்துக்களை கூறியும் வந்தனர்.

திருமணத்தை குறித்து வந்த குற்றச்சாட்டு
மகாலட்சுமி தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டதால் அவர் பணத்திற்காகத்தான் இப்படி செய்து இருக்கிறார். அதனால் தான் அவருக்கு உருவ அளவில் கொஞ்சம் கூட ஒற்றுமையே இல்லாத ரவீந்தரை இவர் திருமணம் செய்திருக்கிறார். என்றெல்லாம் நெட்டிசன்கள் இவரை வைத்து கலாய்த்து வந்தனர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய வழக்கமான வேலைகளை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் நடித்து வந்த அன்பே வா சீரியலில் தொடர்ந்து வாசுகி கேரக்டரில் மகாலட்சுமி நடித்து வருகிறார்.

மீண்டும் பழைய நிலையில்
திருமணத்திற்கு பிறகு கணவரோடு எடுக்கும் புகைப்படங்களை அவ்வபோது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வந்த மகாலட்சுமி தற்போது இவர் இதற்கு முன்பு இருந்தது போலவே இப்போதும் பொருள்களுக்கு பிரமோஷன் செய்து வருகிறார். தற்போது இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு இனி இதையெல்லாம் மகாலட்சுமி செய்ய மாட்டார் என்று நம்பிக் கொண்டிருந்ததாகவும், தயாரிப்பாளரின் மனைவியாக இவரும் தயாரிப்பு பணியை தொடங்குவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் மகாலட்சுமி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறாரே என்று வருத்தத்தோடும், ஏமாற்றத்தோடும் கமெண்ட்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications