கணவரால் கண் கலங்கி கதறி அழுத யாரடி நீ மோகினி சீரியல் நடிகை.. சீரியல் முடிவடைந்ததும் இந்த நிலையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் நடித்த யமுனா சின்னத்துரை தற்போது புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் வைத்திருக்கிறார். அதில் நடந்த நிகழ்வுகள் தான் தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

பல வருடங்கள் கழித்து சொந்தமாக வீடு கட்டி இருக்கும் யமுனா சின்னத்துரை தன்னுடைய வீட்டின் கிரகப்பிரவேசத்தில் கணவரால் கதறி அழுதி இருக்கிறார்.

ஜீ தமிழ் சீரியலில் அறிமுகம்

ஜீ தமிழ் சீரியலில் அறிமுகம்

வெள்ளிதிரை யிலிருந்து ஒரு சில நடிகர்கள் அங்கே வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரைக்கு வருவர். அந்த வகையில் வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சின்ன திரையில் பல வருடங்களுக்குப் பிறகு எண்ட்ரி கொடுத்த யமுனா சின்னத்துரை யாரடி நீ மோகினி சீரியல் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தையும் பெற்றுக் கொண்டார். வெண்ணிலாவுக்கு ஆதரவாக இந்த சீரியலில் ஒரு பேய் கேரக்டரில் நடித்து வந்தார்.

குழந்தைகளை கவர்ந்த கேரக்டர்

குழந்தைகளை கவர்ந்த கேரக்டர்

வெண்ணிலாவாக நடித்த நட்சத்திராவிற்கு ஸ்வேதா கேரக்டரில் நடித்த சைத்ரா ரெட்டியால் அந்த சீரியலில் பல பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது. அப்போது பேயாகவே இருந்து வெண்ணிலாவை காப்பாற்றி ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து விட்டார். குறிப்பாக இது நல்ல பேய் என்று குழந்தைகள் மத்தியிலும் இவருக்கு வரவேற்பு கிடைத்துவிட்டது. இந்த நிலையில் அந்த சீரியல் முடிவடைந்து விட்டது அதற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் எப்போதும் போல ஆக்டிவாக இருக்கும் இவர் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அது மட்டும் அல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் இவர் நடித்திருந்தார்.

புது வீடு

புது வீடு

செந்தூரப்பூவே சீரியலில் தொடர்ந்து இந்த இவர் நடித்து வந்தாலும் திடீரென இப்போது அந்த சீரியலும் முடிவடைந்து விட்டது. அதற்குப் பிறகு சீரியல் எதுவும் இவர் நடிக்காமல் இருந்த நிலையில் புதியதாக வீடு ஒன்றைக் கட்டி இருக்கிறார். பல வருடங்களாக இவர் கண்ட கனவு இந்த வீட்டின் மூலம் நிறைவேறியதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் உருக்கமாக பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் இவருடைய வீட்டில் கிரகப்பிரதேசத்துக்கு சின்னத்திரை பிரபலமான ஒரு சிலர் மட்டும்தான் கலந்து கொண்டிருக்கின்றனர். இவருடைய உறவினர்களும் நண்பர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

கண் கலங்க வைத்த கணவரின் செயல்

கண் கலங்க வைத்த கணவரின் செயல்

நடிகை யமுனாவிற்கு தெரியாமலே அவருடைய கணவர் இந்த வீட்டில் ஒரு அறையை ஒதுக்கி வைத்திருந்தாராம். அதில் இவருடைய பொக்கிஷமான பல பொருட்கள் அந்த வீட்டில் இருந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவருடைய அப்பாவின் உருவத்தை அங்கே வைத்திருக்கின்றனர். அதை பார்த்து கிரகப்பிரவேசம் அன்று இவர் கதறி அழுத்திருக்கிறார். தன்னுடைய தந்தை மறைந்து விட்டாலும் அவரை மீண்டும் இந்த வீட்டிற்கு கொண்டு வந்து விட்ட கணவருக்கு அவர் நன்றி கூறியிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் இவருடைய கணவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+