Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தன்னுடைய தோழியை நினைத்து போஸ்ட் போட்ட யாஷிகா!

Subscribe to Oneindia Tamil

சென்னை : உடல் வலியை விட மன வலியை தான் யாராலும் தாங்க முடியாது. அந்த மாதிரி வலி மிகுந்த நேரத்தில் யாஷிகா இப்போ இன்ஸ்டாகிராமில் போட்டோ போஸ்ட் தான் வைரலாக வலம் வருகிறது.

மரணத்தின் விளிம்பு வரை சென்ற யாஷிகா இப்போ உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்தாலும் தன்னுடைய தோழியை நினைத்து என்னால் தான் அவளுக்கு இந்த நிலைமை என வருத்தத்தில் அவருடைய குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

என்னுடைய வாழ்க்கையில் இனி இந்த மாதிரி செய்ய மாட்டேன் என யாஷிகா சொன்னதற்கு ரசிகர்கள் தங்கள் ஆலோசனைகளையும் ஆசீர்வாதங்களையும் மழை போல பொழிகிறார்கள்.

உடல்நிலையில் முன்னேற்றம்

உடல்நிலையில் முன்னேற்றம்

தன்னைப்பற்றி தனக்கு புரிய வைத்த தருணம் இதுதான். என் முதுகுக்கு பின்னாடி பேசுபவர்கள் இவ்வளவு பேரு இருக்கிறார்களா என புரிந்து கொண்டு இனி இந்த தப்பை இனி செய்ய மாட்டேன் என வேதனையை பகிர்ந்திருக்கிறார். இதனை பார்த்து அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றன. கஷ்டமான நேரத்தை கடந்து வந்தாலும் அதிலிருந்து முழுவதும் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தால் நமக்கு மட்டுமல்ல நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் கேடுதான் என்பதை புரிந்து கொண்டு இனி இந்த மாதிரி தப்பு செய்யாதீங்க என்று ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

கவர்ச்சிப் புயல் யாஷிகா

கவர்ச்சிப் புயல் யாஷிகா

யாஷிகா ஆனந்த் திரைப்படங்களில் அறிமுகமாகி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் கன்டஸ்டன்டாக கலந்து கொண்டார். திரைப்படங்களில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டர். இந்த நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரசிகர்களின் மனதிலும் நல்ல இடத்தைப் பிடித்து விட்டார். அதனால் தான் அவரால் இந்த வீட்டிற்குள் அதிக நாட்கள் இருக்க முடிந்தது .அந்த சீசனை இவர் ஐந்தாவது இடத்தில் முடித்து இருந்தார். இவர் அதிக நாட்கள் இந்த வீட்டிற்குள் இருப்பதற்கு காரணம் அவருடைய ரசிகர்கள் தான் .இவர் சினிமாக்களில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். போட்டோ ஷூட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதினை கவர்ச்சிப் புயலாக அலைக்கழித்து வருகிறார்.

தோழியின் இழப்பு

தோழியின் இழப்பு

சில தினங்களுக்கு முன்பு இவருடைய நண்பர்களுடன் வெளியில் சென்று கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகி அதில் இவருடைய நெருங்கிய தோழியான பவானி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். யாஷிகா வுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இப்போ உடல்நிலை ஓரளவு சரியாக இருக்கும் நேரத்தில் இப்போ இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அதில் அவருடைய தோழியை அவர் எவ்வளவு மிஸ் பண்ணுகிறார் என்பதை வெளிக்காட்டி இருக்கிறார். தான் செய்த தவறினை உணர்ந்து தன் தோழியின் இழப்பினை ஈடுசெய்ய முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பை பார்த்து அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் அளிக்கின்றனர்.

இரண்டாவது பிறப்பு தான்

இரண்டாவது பிறப்பு தான்

நான் இப்போது என்ன செய்கிறேன் என்பதை என்னால் உண்மையில் வெளிப்படுத்த முடியாது ! உயிருடன் இருப்பதில் நான் எப்போதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன் ! நான் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டுமா என்று தெரியவில்லை. அந்த துயரத்தில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் அல்லது என் சிறந்த நண்பனை என்னிடமிருந்து அழைத்துச் சென்றதற்காக என் வாழ்நாள் முழுவதும் கடவுளை குற்றம் சாட்டுகிறேன் .ஒவ்வொரு நொடியும் நான் உன்னை தவற விட்டேன் பவானி, நீ என்னை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று எனக்கு தெரியும் !!நான் மிகவும் வருந்துகிறேன், உங்கள் குடும்பத்தை இவ்வளவு மோசமான சூழ்நிலையில் வைத்தேன். ஒவ்வொரு நொடியும் நான் உன்னை இழக்கிறேன், உயிருடன் இருப்பதில் நான் என்றென்றும் குற்றவாளி என்று நம்புகிறேன் .உங்கள் ஆத்மா சாந்தி அடையும் என்று நம்புகிறேன். நீங்கள் என்னிடம் திரும்பி வர பிரார்த்திக்கிறேன் !!ஒரு நாள் உங்கள் குடும்பம் என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன், நான் என்றென்றும் உன் நினைவுகளை போற்றுவேன்! என்று அவருடைய தோழி பவானியை நினைத்து போஸ்ட் போட்டிருக்கிறார்.

தோழிக்காக பிரார்த்தனை

தோழிக்காக பிரார்த்தனை

அதுமட்டுமல்லாமல் இனி நான் எனது பிறந்தநாளை கொண்டாட மாட்டேன், எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று எனது அனைத்து ரசிகர்களையும் கேட்டுக் கொள்கிறேன்! தயவு செய்து அவளுடைய குடும்பத்திற்காக ஜெபியுங்கள்! கடவுள் அவர்களுக்கு அதிக வலிமையை கொடுப்பார். என் வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்பு .தயவுசெய்து ஒரு நாள் என்னை மன்னியுங்கள் !என்று இரு கரம் கூப்பி மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் யாஷிகாவின் ரசிகர்களும் பவானிக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். பவானியின் குடும்பத்தினருக்காகவும் பிரேயர் செய்து வருகிறார்களாம்.

கடந்த காலம் கடந்துவிட்டது

கடந்த காலம் கடந்துவிட்டது

யாஷிகாவின் பீலிங்கை பார்த்து அவருடைய ரசிகர்கள் விரைவில் நலம் பெறுங்கள் யாஷிகா அது ஒரு பெரிய பாடமாக இருக்கலாம். நீங்கள் ஒரு பிரபலமாக இருக்கலாம் ஆனால் நீங்கள் ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாக வாழ வேண்டும் .கடந்த காலம் கடந்து விட்டது. புதிய வாழ்க்கையை தொடங்குங்கள் என்று கூறியிருக்கின்றனர். இன்னொரு ரசிகர் மக்கள் நீங்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் குடிக்க வில்லை என்று மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கெட்ட நேரம் வரும் போது இது போன்ற விஷயங்கள் நடக்கும். உங்களுடைய தோழியை நீங்கள் திரும்ப கொண்டு வர முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அவருடைய ஆன்மாக்காக பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் பேரழிவைக் கொண்டு வரும் புயல்களிலிருந்து ஏதாவது நல்லது செய்வதாக கடவுள் உறுதியளித்திருக்கிறார்.

வேதனையின் உச்சத்தில்

வேதனையின் உச்சத்தில்

நீங்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று ஆசிர்வாதங்களையும் வழங்கி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் என்னுடைய இந்த இக்கட்டான சூழ்நிலையில் பலர் எனக்காக பிரார்த்தித்த நல்லுள்ளங்களுக்கும் ரொம்பவே நன்றி .அதுமட்டுமில்லாமல் இந்த சூழ்நிலையிலயும் தன்னைப்பற்றி நெகட்டிவ் கமெண்டுகளை போட்டவர்களுக்கும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அந்த ஸ்கிரீன் ஷாட்டுகளை வைத்து இந்த மாதிரி பேசுரவர்களை எனக்கு தெரியப்படுத்திய சமூக வலைத் தளத்துக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+