நிர்வாண போட்டோ.. நடுரோட்டில் இளைஞரை திடீர்னு சூழ்ந்த 59 பெண்கள்.. வாயே திறக்கலயே.. கடைசியில் ட்விஸ்ட்
திருவனந்தபுரம்: காரில் வந்து கொண்டிருந்த இளைஞரை, மொத்தம் 59 பெண்கள், திடீரென மறித்து சூழ்ந்து கொண்டு, சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை கேரளாவில் ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.. என்ன நடந்தது?
திருச்சூரில் 'divine retreat centre' எனும் ஆன்மீக ஓய்வு மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தில் ஏராளமான பெண்களும் ஆண்களும் தங்கி திருப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒரு கிறிஸ்தவ ஆன்மீக மையமாகும். இந்நிலையில் இந்த ஆன்மீக மையத்திலிருந்து ஷாஜி என்பவர் சமீபத்தில் வெளியேறியுள்ளார். இவர் நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் காரில் இந்த ஆன்மீக மையம் வழியாக சென்றிருக்கிறார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது காரை பெண்கள் சிலர் சூழ்ந்திருக்கின்றனர். இந்த பெண்களை ஷாஜிக்கு நன்றாக தெரிந்தவர்கள்தான். இவர்கள் அனைவருமே இவர் விலகிய ஆன்மீக மையத்தில் பணியாற்றிவர்கள்தான். அப்படி இருக்கையில் காரை விட்டு இறங்கி வந்து என்ன விஷயம் ஏன் காரை மறித்தீர்கள் என்று ஷாஜி கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளிக்காத பெண்கள் ஷாஜியை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர்.

தாக்குதல்
இந்த தாக்குதலை எதிர்பார்க்காத ஷாஜி கீழே சரிந்திருக்கிறார். அப்போதும் இவரை விடாமல் இப்பெண்கள் தாக்கியுள்ளனர். தாக்குதலில் ஷாஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பெண்கள் சம்பவ இடத்திலிருந்து விலகி சென்றிருக்கின்றனர். ஷாஜியின் உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியுள்ளன. இதனையடுத்து ஷாஜி தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார்
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 11 பெண்களை கைது செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, "ஷாஜியும் அவரது குடும்பத்தினரும் நெடுங்காலமாக 'divine retreat centre' எனும் ஆன்மீக ஓய்வு மையத்துடன் தொடர்பில் இருந்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இந்த தொடர்பை குடும்பத்தினர் துண்டித்துள்ளனர். இதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆன்மீக மையத்தில் உள்ள பெண்களின் புகைப்படங்கள் மார்ப்பிங் செய்து வெளியாகியுள்ளது. இது இப்பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது
இந்நிலையில் இதனை ஷாஜிதான் செய்திருப்பார் என இப்பெண்கள் கணித்திருக்கிறார்கள். இந்த சந்தேகத்தின் அடிப்படையில்தான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இவர்களின் குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட 59 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 11 பேரை கைது செய்திருக்கிறோம். இவர்கள் யாரேனும் தூண்டுதலன் பேரில்தான் இப்படி செய்தார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஷாஜியை தவிர அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் பயணித்த காரின் கண்ணாடி அடித்து நொருக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளனர்.

சலசலப்பு
மார்ப்பிங் செய்து புகைப்படங்களை பகிர்ந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை ஷாஜி தரப்பினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர். இது திட்டமிட்ட தாக்குதல் என்றும், இதற்கு ஆன்மீக மையத்தின் நிர்வாகிகள்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். நடு ரோட்டில் 59 பெண்களால் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் கேரளா முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications