திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாலியல் கல்வியில் முன்னோக்கி மேலும் ஒரு அடி.. கேரளாவில் நடந்த சூப்பர் சம்பவம்.. என்னாச்சு?

ஜங்க் புஃட் எனப்படும் உணவுகள் ஆண்களின் பாலியல் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்று இந்த கலந்துரையாடல் விளக்குகிறது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கல்லூரி ஒன்றில் பாலியல் கல்வி குறித்து நேற்று(ஜன.28) நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பெண்களுக்கான உரிமைகளாக சட்டமும் அரசாங்கமும் கூறியிருப்பதை ஓரளவு முழுமையாக அமல்படுத்தும் மாநிலங்களின் வரிசையில் கேரளா முதன்மையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மாணவர்களிடையே பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சில முயற்சிகளை அம்மாநிலத்தின் கல்வி நிலையங்கள் மேற்கொண்டு வருகின்றன. இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் கேரள உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியிருந்தது.

பட்டப்பகலில் டிஜிபி அலுவலகம் முன்பே.. ஜாகிங் போன பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்.. 'பரபர' வீடியோ பட்டப்பகலில் டிஜிபி அலுவலகம் முன்பே.. ஜாகிங் போன பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்.. 'பரபர' வீடியோ

அதில், ஆண்கள் பெண்களை அவர்கள் அனுமதியின்றி தொடக்கூடாது என்று கூறியிருந்தது. இந்த அறிவுறுத்தல் வந்த அடுத்த நாளே மாணவர்கள் மத்தியில் இப்படியொரு நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மாணவர்களும் மாணவிகளும் இணைந்து பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்ச்சியில் பாலியல் கல்வி குறித்து விரிவாக பேச VVox எனும் பாலியல் கல்வி நிறுவனத்தின் கல்வியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

பாலியல் கல்வி

பாலியல் கல்வி

இந்நிறுவனம் நாடு முழுவதும் பாலியல் கல்வி குறித்து விழப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக தாங்கள் செய்த ஆய்வுகளையும் தகவல்களையும் அறிவியல் அடிப்படையில் மக்களிடம் கொண்டு சேர்க்க கல்வியாளர்களை பயன்படுத்தி வருகிறது. இந்த கல்வியாளர்கள் பாலியல் கல்வி குறித்து அமெரிக்காவின் ஹாவர்ட்டு பல்கலையில் பயிற்சி பெற்றிருப்பார்கள். இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்வில் மாணவர்கள் பலர் தங்களது சந்தேகங்களை வெளிப்படையாக மாணவிகள் முன்னிலையிலேயே கேட்டு தெரிந்துக்கொண்டிருக்கிறார். இந்நிகழச்சி சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றிருக்கிறது.

மாணவர்கள்

மாணவர்கள்

இதில் பங்கேற்ற 19 வயதான மாணவர் ஒருவர் கூறுகையில், "நாங்கள் பாலியல் கல்வி என்பது ஆபாச படங்களின் வாயிலாகத்தான் கிடைக்கப்படுகிறது என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் ஆபாச படங்கள் பாலியல் குறித்த அதீத கற்பனையைதான் காட்சிப்படுத்துகிறது என்று புரிந்துக்கொண்டோம்" எனக்கூறியுள்ளார். நாடு முழுவதும் வெறும் 5% மருத்துவர்கள் மட்டுமே பாலினவியலில் பயிற்சி பெற்றவராவார்கள். எனவே இந்த எண்ணிக்கையை அதிகமாக்கும் வரையில் பாலியல் கல்வி குறித்த உண்மைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவே இந்த நிகழ்ச்சியை முன்னெடுப்பதாக Vvox கூறியுள்ளது.

மாணவிகள்

மாணவிகள்

இதில் பங்கேற்ற மாணவிகள் கூறுகையில், "செக்ஸ் பற்றிய கட்டுக்கதைகளை இந்த கலந்துரையாடல் எங்களிடம் உடைத்துவிட்டது. இதற்கு முன்னர் செக்ஸ் என்பது ஆபாசம் என்று கருதியிருந்தோம். ஆனால் செக்ஸ் என்பது ஒரு சாதாரண வார்த்தைதான் என்பதை நாங்கள் தற்போது புரிந்துகொண்டோம். நாங்கள் இதற்கு முன்னர் பயின்ற பள்ளியில் செக்ஸ் குறித்து எங்களுக்கு இவ்வளவு விரிவாக சொல்லிக் கொடுத்தது கிடையாது. ஆனால் இன்று செக்ஸ் பற்றி பேசுவதில் எந்த தவறும் இல்லை என்று உணர்ந்துக்கொள்ள முடிந்தது" என்று கூறியுள்ளார். மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் இது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

வரவேற்பு

வரவேற்பு

இந்த கலந்துரையாடலில் ஆரோக்கியமான செக்ஸ் என்பது என்னவென்றும், அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்றும் பாலியல் கல்வியாளர்கள் கூறியுள்ளனர். சத்தான உணவை எடுத்துக்கொள்வது, விளையாடுவது, நேசிப்பது, அத்துடன் பொறுப்போடு இருப்பது ஆகியவை அனைத்தும்தான் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு அடித்தளம் என்றும், ஜங்க் புஃட் எனப்படும் நொறுக்கு தீனிகள் ஆண்களின் உடலை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்றம் கல்வியாளர்கள் விளக்கியுள்ளனர். இந்த உணவுகள் ஆண்குறி தமனிகளை அடைத்து பாலியல் பாதிப்புகளை உருவாக்குவதையும் கல்வியாளர்கள் விளக்கியுள்ளனர். இந்த நிகழ்வை கல்லூரியின் NSS மாணவர்கள் ஒருங்கிணைத்துள்ளனர். இது அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

English summary
A discussion program held yesterday (January 28) on sex education in a college in Kerala has attracted everyone's attention.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X