உன்ன விடமாட்டேன்..அறைக்குள் அலறிய விஷ்ணு பிரியா! காதல் தோல்வியால் மிருகமான ஷியாம்ஜித்! கலகலத்த கேரளா
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் காதல் தகராறில் இளம் பெண் விஷ்ணுபிரியா கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக 25 வயது இளைஞர் ஒருவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டில் தனியாக இருந்த விஷ்ணு பிரியா தலையில் சுத்தியலால் அடிக்கப்பட்டும் கழுத்து அறுக்கப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருந்தார். முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கேரளாவை உலுக்கிய இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விஷ்ணு பிரியாவின் உடலை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கேரள பெண் கொலை
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் விஷ்ணு பிரியாவின் மொபைல் ஃபோனையும் சோதனை செய்த போது ஒரு குறிப்பிட்ட இளைஞர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மானந்தேறி பகுதியைச் சேர்ந்த ஷியாம்ஜித் என்பவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் அவர்தான் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதும் அம்பலமானது. கல்லூரி படிப்பை முடித்து தனது தந்தைக்கு உதவியாக ஹோட்டல் தொழில் ஈடுபட்டு வந்த ஷ்யாம்ஜித் விஷ்ணு பிரியாவை ஐந்து வருடங்களாக காதலித்துள்ளார்.

காதல் தகராறு
மருத்துவமனை வேலைக்குச் சென்ற பின் விஷ்ணு பிரியாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஷியாமின் நடவடிக்கைகள் பிடிக்காததால் வேறு ஒருவரை அவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு நிலையில் விஷ்ணுபிரியா ஷாமுடன் பேசுவதை நிறுத்தி இருக்கிறார். இதனால் கடும் கோபம் கொண்ட ஷியாம் விஷ்ணு பிரியாவையும் அவரது காதலனையும் கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

கொடூரமான முறையில் கொலை
இதற்காக கடைவீதிக்கு சென்று சுத்தியல் மற்றும் கத்தியையும் வாங்கியுள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு விஷ்ணு பிரியாவின் வீட்டிற்கு ஷியாம் சென்றபோது அங்கு வேறு யாரும் இல்ல. தனது காதலனுடன் விஷ்ணு பிரியா பேசிக் கொண்டிருப்பதை கண்ட ஷியாம் ஆத்திரத்தில் அவரது தலையில் சுத்தியலால் பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் விஷ்ணு பிரியா மயங்கிய நிலையில் அவரது கழுத்தை கத்தியால் அறுத்ததாகவும் பல இடங்களில் கொடூரமாக குத்தி விட்டு தப்பியது தெரிய வந்தது.

18 இடங்களில் காயம்
ரத்த வெள்ளத்தில் சரிந்த விஷ்ணு பிரியா சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்த நிலையில் வீட்டுக்குச் சென்ற ஷியாம் குளித்துவிட்டு தனது தந்தையின் கடைக்கு சென்று இருக்கிறார். அப்போதுதான் போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர். மேலும் விஷ்ணு பிரியாவின் காதலனையும் ஷியாம் கொலை செய்ய திட்டமிட்டு இருந்த நிலை அதனை போலீசார் தடுத்துள்ளனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட விஷ்ணு பிரியாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக உட்படுத்தப்பட்ட போது அவரது உடலில் ஆழமாக 18 இடங்களில் காயம் இருந்தது தெரியவந்தது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் ஷியாமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications