நோ நெவர்! நான் இருக்குற வரை நடக்காது.. ஸ்டாலின் ஸ்டைலில் பினராயி ஆக்சன்.. அடம்பிடிக்கும் கேரள ஆளுநர்
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் சமீபத்தில் துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவை அம்மாநில அரசு நிறைவேற்றியது. இதனையடுத்து இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மசோதா கல்வி நிறுவனங்களின் சுயாட்சியை பறிக்கும் என்று அம்மாநில ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், "துணை வேந்தர்கள் தகுதியின் அடிப்படையிலே நியமிக்கப்படுவார்கள். இந்த அதிகாரத்தை அரசுக்கு வழங்க முடியாது" என்று திட்டவட்டமாக ஆளுநர் மறுத்துள்ளார்.

துணை வேந்தர்கள் நியமனம்
மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் ஆளுநர்களால் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், பாஜக ஆட்சியில் இருக்கும் குஜராத் மாநிலத்தில் துணை வேந்தர்களை நியமிக்கும் பொறுப்பு அம்மாநில அரசுக்கே வழங்கப்பட்டது. இதேபோல தெலங்கானாவிலும் துணை வேந்தர்களை அம்மாநில அரசே நியமித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கேரளாவிலும் மாநில அரசு துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில் மசோதவை சட்டமன்றத்தில் அம்மாநில அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.

கொலை முயற்சி
இந்த மசோதா குறித்து அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "கடந்த 2019ல் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எனக்கு எதிராக கொலை முயற்சி நடந்தது. இதற்கு அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்தான் காரணம். ஆனால் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை." என்று குற்றம்சாட்டினார். மேலும், "மாநில அரசு ஆளுநர் அலுவலகத்தை கேவலப்படுத்தவும் இழிவுபடுத்தவும் முயற்சிக்கிறது." என்று கூறினார்.

அனுமதிக்க மாட்டேன்
மேலும், என்னை பணிய வைக்க மாநில அரசு ஒவ்வொரு யுக்தியையும் பயன்படுத்துகிறது என்று கூறிய அவர், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், "எல்லாமே தகுதியின் அடிப்படையில்தான் நியமிக்கப்படும். துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்க முடியாது. இது நிர்வாகத் தலையீட்டிற்குச் சமம். இந்த மசோதா கல்வி நிறுவனங்களின் சுயாட்சியை பறிக்கும். நான் இருக்கும் வரை இதற்கு அனுமதிக்க மாட்டேன்." என்று கூறியுள்ளார்.

பூஞ்சி ஆணையம்
முன்னதாக மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆணையத்தில், 'அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத அதிகாரங்கள் ஆளுநருக்கு வழங்கப்படக்கூடாது. குறிப்பாக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநடரிம் இருந்தால் அது அதிகாரத்திற்கு வழிவகுக்கும்' என்று கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications