திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரைட்டர் மடியில் உட்கார்ந்த பெண்.. ஆபாச உடையணிபவரிடம் சீண்டல்.. கோர்ட் சொன்ன விநோத தீர்ப்பு

ஆபாச உடையணிபவரிடம் சீண்டல் குற்றமாகாது என்று தீர்ப்பு தரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஆபாச உடையணிபவரிடம் சீண்டல் குற்றமாகாது என்று நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பு விவாதத்தையும், சர்ச்சையையும் கிளப்பி வருகிறது.

Recommended Video

    இஸ்டாவில் ரீல் விட்ட ’சஞ்சு’.. கொத்தாக தூக்கி கம்பி எண்ண வைத்த போலீஸ்!

    நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    அந்தவகையில், 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒன்று, மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

    7 கடல்கள்.. 7 மலைகளை தாண்டி.. 7 கடல்கள்.. 7 மலைகளை தாண்டி..

     தோலுடன் - ஆடை

    தோலுடன் - ஆடை

    அப்போது, நீதிபதி ஒரு வினோதமான கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.. பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை ஆடை இல்லாத நிலையில், தோலுடன் தோல் தொடுவது தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை அவர் அணிந்த ஆடைக்கு மேல் தொட்டுதொந்திரவு செய்தால் அது பாலியல் வன்முறை இல்லை என்று தீர்ப்பளித்திருந்தார். இது அப்போதே பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

    விநோதம்

    விநோதம்

    இந்நிலையில், கேரள ஹைகோர்ட்டில் நீதிபதி ஒருவர் விநோத தீர்ப்பை அளித்துள்ளார்.. இங்கு வசித்து வருபவர் எழுத்தாளர் சிவிக் சந்திரன்... 74 வயதான சிவிக் சந்திரன் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இவர் மீது ஒரு பாலியல் வழக்கு எழுந்தது.. கோழிக்கோடு மாவட்டம் கொயிலனி பீச்சில், கடந்த 2020 பிப்ரவரியில் தன்னை சிவிக் சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் தந்தார்.. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட கீழமை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

     சிவிக் சந்திரன்

    சிவிக் சந்திரன்

    அந்த மனுவுடன், புகார் தந்த சம்பந்தப்பட்ட பெண், தன்னுடைய மடி மீது உட்கார்ந்திருக்கும் போட்டோவையும் சிவிக்சந்திரன் இணைத்து தந்தார்.. இதையடுத்து, இந்த வழக்கில் சிவிக் சந்திரனுக்கு கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. அதற்கான உத்தரவு நகல் நேற்றைய தினம் வெளியானது... அதில், "முன்ஜாமீன் கோரி மனுதாரர் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இணைக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, புகார் தெரிவித்த பெண் தன்னுடைய உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்துள்ளார். அந்த ஆடை பாலியல் ரீதியில் தூண்டும் வகையில் உள்ளது.

     மடியில் பெண்

    மடியில் பெண்

    உடல் ரீதியிலான தொடர்பு (Physical Contact) இருந்தது ஒப்புக்கொண்டபோதும், 74 வயதான மாற்றுதிறனாளி நபர் புகார் அளித்த பெண்ணை தன்னுடைய மடியில் வலுக்கட்டாயமாக உட்கார வைத்து, பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக சொல்வதை நம்பமுடியவில்லை.. அதனால், சட்டப்பிரிவு 354 ஏ குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பொருந்தாது என்று கருதப்படுகிறது. இதன் மூலம் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது" என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆபாச உடையணிபவரிடம் சீண்டல் குற்றமாகாது என நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளது, விவாதத்தையும், சர்ச்சையையும் கிளப்பி வருகிறது.

    English summary
    Innovative Statement and kerala court says clearly about sec 354, what happened actually ஆபாச உடையணிபவரிடம் சீண்டல் குற்றமாகாது என்று தீர்ப்பு தரப்பட்டுள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X