நரபலி..அறை முழுவதும் ரத்தக்கறை! ஃப்ரிட்ஜில் 10 கிலோ மனித கறி! குக்கரில் இதயம்! அதிர்ந்து போன போலீஸ்!
திருவனந்தபுரம் : இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கேரள நரபலி சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பகவால் சிங் வீட்டில் குளிர்சாதன பெட்டியில் 10 கிலோ மனித இறைச்சி மற்றும் மனித எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, வீட்டின் பல்வேறு இடங்களில் ரத்தக்கறை இருந்ததோடு, பிரஷர் குக்கரில் மனித கறியை சமைத்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் சாலைகளில் லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் ஜூன் செப்டம்பர் மாதங்களில் மாயமான நிலையில் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
கேரளா மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை இந்த நரபலி சம்பவம் ஏற்படுத்தியது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ள நிலையில் இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பகவல்சிங், லைலா மற்றும் பெரம்புவாரைச் சேர்ந்த முகம்மது ஷஃபி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நரபலி அதிர்ச்சி
இந்நிலையில், கேரளாவில் 2 பேர் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நரபலி நடந்த பகவல்சிங் வீட்டிற்கு குற்றவாளிகளை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய்களுடன் ஆய்வு நடத்தி வரும் போலீசார், வீட்டின் பின்புறம் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலும் ஆய்வு செய்தனர். இவர்களுடன் தடயவியல் துறை நிபுணர்களும் தடயங்களை சேகரித்து வருகின்றனர். இந்த ஆய்வில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தடயங்கள் சேகரிப்பு
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பகவால் சிங் வீட்டில் போலீசார் தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் 10 கிலோ மனித இறைச்சி மற்றும் மனித எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அரிவாள் மற்றும் கத்தியால் உடலை வெட்டியதில் வீட்டின் பல்வேறு இடங்களில் ரத்தக்கறை ஏற்பட்டுள்ளது.

குக்கரில் மனித கறி
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக பிரஷர் குக்கரில் இதயம், நுரையீரல் உள்ளிட்ட பாகங்களுடன் மனித கறியை சமைத்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும், டம்மியான மனித உடலை வைத்து மூன்று பேரிடம் காவல்துறை விசாரணை நடத்திய நிலையில் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த நரபலி கொடுக்க பயன்படுத்தப்பட்ட அரிவாள் கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர் சோதனை
நரபலி கொடுக்கப்பட்ட பின்னர் மஞ்சள் செடிகளை அவர்கள் உடல் மீது வைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டின் பல்வேறு இடங்களில் மஞ்சள் செடிகள் இருப்பதால் அதன் கீழ் மேலும் பல உடல்கள் இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தடய அறிவியல் துறையினர் தொடர்ந்து வீடு முழுவதும் சோதனை நடத்தி வரும் நிலையில், மேலும் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications