திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருவனந்தபுரம் மேயர் பதவியை கைப்பற்ற முட்டி மோதிய பாஜக.. மூக்கு உடைவதுதான் மிச்சம் போலயே!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் கடந்த 2015-ஐ காட்டிலும் பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால் இந்த மாநகராட்சியின் மேயர் பதவியை பாஜக வெற்றி பெறாது என்றே தெரிகிறது.

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை போட்டியிட்டன.

இந்த தேர்தலில் மேயர் பதவிகளை பிடிக்க கட்சிகள் கடும் போட்டியிட்டன. அந்த வகையில் கேரளாவில் மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. தெற்கு கேரளாவில் 2, மத்திய கேரளாவில் 2, வடக்கு கேரளாவில் 2 என உள்ளன.

 இடதுசாரிகளிடமிருந்து பந்தளம் நகராட்சியை கைப்பற்றிய பாஜக.. சபரிமலை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி? இடதுசாரிகளிடமிருந்து பந்தளம் நகராட்சியை கைப்பற்றிய பாஜக.. சபரிமலை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி?

திருவனந்தபுரம்

திருவனந்தபுரம்

அவை திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, கொல்லம், திருச்சூர், கண்ணனூர் ஆகியவை ஆகும். இதில் மிகப் பெரிய மாநகராட்சி திருவனந்தபுரம் ஆகும். இந்த மாநகராட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் கட்சிகள் போட்டி போட்டு கொண்டு தேர்தல் பிரசாரத்தை செய்தன.

கட்சி தோல்வி

கட்சி தோல்வி

இதில் கொச்சி மாநகராட்சியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அது போல் திருச்சூர் மாநகராட்சியில் பாஜக தோல்வி அடைந்துவிட்டது. திருவனந்தபுரத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என பாஜக நம்பியது. ஆனால் இங்கும் அக்கட்சி தோல்வி அடையும் நிலையே உள்ளது.

காங்கிரஸ் கூட்டணி

காங்கிரஸ் கூட்டணி

இங்கு இடதுசாரிகள் ஜனநாயக கூட்டணி 50 இடங்களிலும், பாஜக 30 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த முறை அதாவது 2015-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் 34 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை குறைந்துவிட்டது.

திருவனந்தபுரம்

திருவனந்தபுரம்

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக தன்னுடைய செயல்பாட்டை மனதில் வைத்து கொண்டு திருவனந்தபுரம் மாநகராட்சியை பிடிக்க மாவட்ட தலைவர் விவி ராஜேஷ் வசம் பொறுப்பை ஒப்படைத்தது. ஆனால் நடப்பவை எல்லாம் பாஜகவுக்கு சாதகமாக இல்லை. ஏற்கெனவே இருந்த இடங்களை விட சற்று குறைந்துள்ளது. எனினும் மேயர் பதவியை பெறும் அளவிற்கு வெற்றி பெறாது என்றே தெரிகிறது.

மாநகராட்சி

மாநகராட்சி

திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக இருந்தவர் கே ஸ்ரீகுமார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். இவர் கரிக்காகம் வார்டில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியுற்றார். உள்ளூரில் மிகவும் பிரபலமான ஸ்ரீகுமார் தோல்வி அடைந்தது கட்சியினரை அதிர வைத்துள்ளது. ஒரு வேளை அவர் வெற்றி பெற்றிருந்தாலும் அவரால் மேயராகியிருக்க முடியாது. ஏனெனில் இந்த முறை மேயர் பதவி பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

English summary
It seems No mayor will be elected for BJP in Thiruvananthapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X