ஆணாக இருந்து பெண்ணாக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வோர் கேரளாவில் அதிகரிப்பு
திருவனந்தபுரம்: ஆண்களாக இருந்து பெண்களாக அறுவை சிகிச்சை செய்து கொள்வோர் எண்ணிக்கை கேரளாவில் அதிகம் என்று சமூக நீதி துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
திருநங்கைகள் அறுவை சிகிச்சை செய்து கொள்வது இயல்பு .அது போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு சமூக நீதித்துறை நிதி உதவி செய்கிறது.
எனவே இந்த புள்ளிவிபரங்களை அந்த துறை சேகரித்து வைத்துள்ளது.

கேரளாவில் அதிகம்
அதன்படி பெண்களாக இருந்து ஆண்களாக (trans men) அறுவை சிகிச்சை செய்வதை விடவும் ஆண்களாக இருந்து பெண்களாக (tans women) அறுவை சிகிச்சை செய்பவர்கள் எண்ணிக்கை கேரளாவில் அதிகமாக, இருக்கிறது 2018-19ம் நிதியாண்டில் 19 திருநங்கைகள் அரசிடமிருந்து அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி பெற்று உள்ளனர்.

அறுவை சிகிச்சை எண்ணிக்கை அதிகம்
2021-22 ஆம் நிதியாண்டில் இது 83 பேராக உயர்ந்துள்ளது. இதில் 41 பேர் திருநங்கை பெண்கள். அதாவது பெண்களாக அறுவை சிகிச்சை செய்தவர்கள். 2018 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 127 பேர் அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி பெற்றுள்ளார்கள். திருநங்கை பெண்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் திருநங்கை ஆண்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குகிறது கேரள அரசு.

சிக்கல்கள்
பெண்ணாக இருந்து, ஆணாக அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் செல்வதற்கு காரணம் அறுவை சிகிச்சையில் இருக்கக்கூடியசிக்கல்கள் மற்றும் குடும்பத்தினர் ஒதுக்குதல் தெருக்களில் தொந்தரவு செய்வோர் போன்றவை காரணம் என்று கூறப்படுகிறது.

பிரச்சினை
இது குறித்து திருநங்கை கிருத்திக் என்ற திருநங்கை ஆண் கூறுகையில், பெண்ணாக இருந்து ஆணாக மாறுவதற்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு செலவு அதிகம். சிக்கல் அதிகம். ஆணுறுப்பு ஒன்று உருவாக்கப்படும். இதனால் பெரும்பாலானோர் இதை செய்து கொள்ள விரும்புவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள்
திருநங்கை பிரிவுக்கான திட்ட ஒருங்கிணைப்பாளர் சியாமா பிரபா கூறுகையில், நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை முறைகள் பின்பற்றப் படாமல் சிலருக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அறுவை சிகிச்சை செய்து கொள்வோரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறுவது அவரது உடல் நிலை தொடர்பாக மருத்துவரிடம் சான்றிதழ் பெறுவது ஆகியவற்றோடு கடமை முடிந்ததாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை தவிர்ப்பதற்கு இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை மருத்துவமனைகளில் வைத்து மட்டும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications