பர்தா அணிந்த உருவம்.. ஆண்போல் நடை! கேரள மக்களுக்கு வந்த சந்தேகம் - சங்கி மங்கிபோல் சிக்கிய சாமியார்
திருவனந்தபுரம்: கேரளாவில் பர்தா அணிந்து நடந்து சென்ற கோயில் பூசாரியை பொதுமக்களே பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் விஜய் நடித்த போக்கிரி படத்தில் சங்கி மங்கி என்ற நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் வடிவேலு. அதில் அசினை வேவு பார்க்க பல்வேறு வேடங்களில் செல்லும் வடிவேலு பர்தா அணிந்த வேடத்திலும் செல்வார்.
பர்தா அணிந்து முகம் வரை மறைத்திருக்கும் வடிவேலு மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்திருப்பார். அதை வைத்து விஜய்யின் நண்பர்கள் அவரை கண்டுபிடித்து தாக்குவார்கள். அப்போது வரும் மண்டை மேல் உள்ள கொண்டையை மறந்துட்டேனே என்ற வசனம் இன்று வரை பேமசாக இருக்கிறது.

கேரள சம்பவம்
இதேபோன்ற உண்மை சம்பவம்தான் தற்போது கேரளாவில் அரங்கேறி இருக்கிறது. கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டி பகுதியில் புர்கா என்று சொல்லப்படும் தலைமுதல் கால் வரை கருப்பு துணியால் மறைக்கப்பட்டு இருக்கும் உடையை அணிந்தபடி ஒருவர் நடந்து சென்று இருக்கிறார்.

மக்கள் சந்தேகம்
ஆனால், அவரது நடையும் பாவனையும் ஆண்போல் இருந்ததை கண்டு அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் சந்தேகம் அடைந்து இருக்கின்றனர். உடனே புர்கா அணிந்து சென்றவரை தடுத்து நிறுத்தி முகத்தை காட்டுமாறு அவர்கள் கூறியுள்ளனர். அப்போது அது பெண் அல்ல, ஆண் என்பது தெரியவந்திருக்கிறது.

கோயில் பூசாரி
அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் ஜிஷ்னு நம்பூதிரி (வயது 28) என்றும், மேப்பயூர் அருகே உள்ள கோயில் ஒன்றில் பூசாரியாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டதன் காரணமாக பர்தா அணிந்து வெளியில் வந்ததாக அவர் விளக்கமளித்து உள்ளார்.

அம்மை நோயா?
ஆனால், பூசார் ஜிஷ்னு நம்பூதிரி அம்மை நோயால் பாதிக்கப்பட்டதற்கான எந்த விதமான அறிகுறியும் தென்படவில்லை என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். இருப்பினும் அவர் இதற்கு முன் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதில்லை என்பதால் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications