கேரளாவை உலுக்கும் தக்காளி காய்ச்சல் பீதி! அறிகுறிகள் என்ன? செய்ய வேண்டியவை கூடாதவை..? முழு தகவல்கள்
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் தக்காளி காய்ச்சல் என்ற ஒருவகை காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், மக்களிடம் அதுகுறித்த அச்சம் நிலவி வருகிறது. அதனை போக்கும் விதமாக தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள், சிகிச்சை முறைகள், முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம்..
கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பை விட தற்போது மீண்டும் ஒரு வைரஸ் பாதிப்பு அங்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. தக்காளி காய்ச்சல் என புனைப்பெயரிட்டு அழைக்கப்படும் அந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அங்கு அதிகரித்து வருகிறது.
குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவது அச்சத்தை அதிகரித்துள்ள நிலையில் கொல்லம் மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த அரிய வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தக்காளி காய்ச்சல் பீதி
ஐந்து வயதுக்குட்பட்ட 80 குழந்தைகளில் மர்ம நோய் கண்டறியப்பட்டதை அடுத்து, 'தக்காளி காய்ச்சல்' பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரளாவில் அரியவகை வைரஸ் நோய் பரவி வருவது தமிழக அரசையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து தமிழக-கேரள எல்லையில் உள்ள வாளையாறில் காய்ச்சல், மற்றும் பிற நோய் அறிகுறிகளுடன் கோவைக்கு வருபவர்களுக்கு மருத்துவக் குழு சோதனை நடத்தி வருகிறது.

காரணம் என்ன?
இதுவரை நோய்க்கான சரியான காரணம் அறியப்படாத நிலையில், சுகாதார அதிகாரிகள் இன்னும் தக்காளி காய்ச்சலுக்கான முக்கிய காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். இந்த காய்ச்சல் முதலில் கண்டறியப்பட்ட கேரளாவின் கொல்லத்தில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாநிலத்தின் தென் பகுதிகளில் உள்ள ஆரியங்காவு, அஞ்சல் மற்றும் நெடுவத்தூர் ஆகிய இடங்களிலும் வழக்குகள் பதிவாகியுள்ளன. உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து வழக்குகளும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிகுறிகள் என்ன?
காய்ச்சல் குறித்த பீதி பலரிடமும் நிலவி வரும் நிலையில் தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள் என்ன மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் என்ன? அந்த நோயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் விரிவாக பார்க்கலாம். தக்காளி காய்ச்சல் அறிகுறிகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் பரவிய சிக்குன் குனியா காய்ச்சலைப் போலவே அறிகுறிகளைக் கொண்டுள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அதிக காய்ச்சல் உடல் வலி
அதிக காய்ச்சல், உடல்வலி, மூட்டு வீக்கம், சோர்வு போன்ற சிக்குன்குனியாவைப் போலவே தக்காளி காய்ச்சலுக்கும் சில அறிகுறிகள் உள்ளன. இருப்பினும், பாதிக்கப்பட்ட குழந்தைகளும் அரிப்பு மற்றும் தோல் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலின் பாகங்களில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன. வயிற்றுப் பிடிப்புகள், குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு, கைகள், முழங்கால்கள் ஆகியவற்றின் நிறமாற்றம் ஆகியவை இந்த காய்ச்சலின் வேறு சில அறிகுறிகளாகும்.

நோய் தடுப்பு நடவடிக்கைகள்
இனி நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம். முதலாவதாக குழந்தைகள் வசிக்கும் பகுதிகளில் தூய்மை மற்றும் சுகாதாரம் பராமரிக்கப்பட வேண்டும். முறையான காற்றோற்றம் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் பெற்றோர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் அரிப்பு அல்லது கொப்புளங்கள் இருந்தால் நோய் பரவுவதைத் தடுக்க, பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும். மேலும் காய்ச்சலின் நீண்டகால பாதிப்புகளைத் தவிர்க்க நோயாளிகள் சரியான ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications