Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த 1 மணி நேரத்துக்கு மழை விடாது! சென்னை டூ குமரி வரை.. தமிழகம் முழுக்க 28 மாவட்டங்களுக்கு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை முதல் குமரி வரை 28 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (24-11-2025) மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுபெறக்கூடும்.

chennai-to-kanyakumari-non-stop-rain-for-the-next-one-hour-alert-issued-for-28-districts-in-tamil


புயல் உருவாக வாய்ப்பு

இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். இதேபோன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்றும் (24-11-2025) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 25-ஆம் தேதி வாக்கில் (நாளை), குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெறக்கூடும்.

40 கிமீ வேகத்தில் காற்று

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் (24-11-2025) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்று நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியிருந்தது.

அடுத்த 1 மணி நேரத்திற்கு

மேலும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த நிலையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு சென்னை முதல் குமரி வரை 28 மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை மையம் கூறியிருப்பதாவது: -

இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தில், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர். தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 28 மாவட்டங்களிலும் புதுவை, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

நாளை எங்கெல்லாம் கனமழை பெய்யும்

நாளை தமிழகத்தில் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

மழை அளவு (செமீ)

* ஊத்து (திருநெல்வேலி) 23,
* நாலுமுக்கு இருநெல்வேலி) 22.
* சேத்தியாத்தோப்பு (கடலூர்), காக்காச்சி (இருநெல்வேவி) தலா 21.
* மாஞ்சோலை (திருநெல்வேலி) 18
* பரங்கிப்பேட்டை (கடலூர்), சிதம்பரம் (கடலூர் புவனகிரி (கடலூர்) திருக்குவளை (நாகப்பட்டிணம்), மதுக்கூர் (தஞ்சாவூர்) தலா 14.

* வெட்டிக்காடு (தஞ்சாவூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம், நாகப்பட்டினம் (நாகப்பட்டின அண்ணாமலை நகர் (கடலூர் தலா 13.
* தெம்பரம் AWS (ஓரத்தநாடு (தஞ்சாவூர்), வடகுத்துகடலூர் வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்ஷ் தலா 12.
* நெய்வேலி ANS (கடலூர்). அய்யம்பேட்டை (தஞ்சாவூர் திருத்துறைப்பூண்டி (திருவாரூர். திருப்பூண்டி நாகப்பட்டினம்) தலா 11 மழை பெய்துள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+