சேவை வரியை 0.5 சதவீதம் உயர்த்தியது மத்திய அரசு !
டெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்காக நாடு முழுவதும் சேவை வரியை 0.5 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வரி உயர்வு நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பட்ஜெட்டில் 12.36%ஆக இருந்த சேவை வரியை 14% ஆக மத்திய அரசு உயர்த்தியது. இந்த சேவை வரி உயர்வு நாடு முழுவதும் கடந்த ஜூன் 1 ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

தேசிய ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார். தூய்மை இந்தியா பங்களிப்புக்கு நூறு சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டம் மற்றும் கங்கை நதியை தூய்மைபடுத்துதல் ஆகிய இரு திட்டங்களுக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்காக சேவை வரி 0.5 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நவம்பர் 15ம் தேதி முதல் இது அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து ரயில், விமானப் பயணம், வங்கிச் சேவை, மொபைல் ரீசார்ஜ், காப்பீடு, விளம்பரம், கட்டுமானம், கிரெடிட் கார்டு, சுற்றுலாப் பயணம் உள்ளிட்டவற்றுக்கான செலவினங்கள் அதிகரிக்கவுள்ளன. மேலும், ஒவ்வொரு 100 ரூபாய் செலவினங்களுக்கும் 50 பைசா கூடுதலாக செலுத்த வேண்டிவரும்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications