மகா கும்பமேளாவில் கைகோர்த்த கீதா பிரஸ் & கவுதம் அதானி! சனாதன மரபுகளை பாதுகாக்க புதிய முயற்சி
பிரயாக்ராஜ்: பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளா 2025 என்பது வெறுமன நதிகளின் சங்கமம் மட்டுமில்லை.. அது நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கான சேவை செய்வது ஆகியவற்றின் மாபெரும் சங்கமமாகும். இந்த மாபெரும் நிகழ்வுக்குப் பலரும் பங்களித்துள்ள நிலையில், பல கோடி பக்தர்களுக்கு ஆன்மீக அனுபவத்தை மேம்படுத்துவதன் மூலம் கவுதம் அதானி மற்றும் அதானி குழுமத்தின் பங்களிப்பு தனித்து நிற்கிறது.
கீதா பிரஸ் பாரம்பரியத்தைப் புதுப்பிக்க உதவி
1923ம் ஆண்டு கோரக்பூரில் நிறுவப்பட்ட கீதா பிரஸ், புனித நூல்கள், வேதங்கள் மற்றும் பக்தி நூல்களை வெளியிட்டு, சனாதன இலக்கியத்தின் ஒரு மைல்கல்லாக பல காலமாக இருந்து வருகிறது. இருப்பினும், சமீப காலமாக கீதா பிரஸ் எதிர்கொண்டு வரும் சவால்கள் அதன் மரபுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அதன் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் கவுதம் அதானி அதன் மறுமலர்ச்சிக்கு உதவ முன்வந்துள்ளார்.

அதானியின் உதவி கீதா பிரஸ் நிறுவனத்திற்கு ஒரு புதிய புத்துணர்வை அளித்துள்ளது. அதானி குழுமம் கீதா பிரஸ்ஸுடன் இணைந்து, மகா கும்பமேளாவின் போது பக்திப் பாடல்களின் தொகுப்பான ஆர்த்தி சங்க்ராவின் ஒரு கோடி இலவச பிரதிகளை விநியோகிக்கிறது. மனிதக் குலத்திற்குச் சேவை செய்யப் பாரம்பரிய மதிப்புகளுடன் நவீனத்துவத்தை இணைக்க வேண்டும் என்ற அதானியின் சிந்தனையின் ஒரு வெளிப்பைடாகவே இது இருக்கிறது.

மகா கும்பமேளாவில் அதானியின் பங்களிப்பு
மகா கும்பமேளாவில் பக்தர்களுக்குச் சேவை செய்வதை கீதா பிரஸ் மற்றும் கௌதம் அதானி இருவரும் ஆழமாக மதிக்கிறது. கீதா பிரஸ் உடன் இணைந்து அதானி குழுமம் செயல்படுவது ஆன்மீகக் கட்டமைப்பை வலுப்படுத்துகிறது. ஆரத்தி சங்க்ரா பிரதிகளை விநியோகம் செய்வது மட்டுமின்றி, அதானி அறக்கட்டளை இஸ்கானுடன் கைகோர்த்து, மகாபிரசாத் மூலம் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்குச் சத்தான மற்றும் தூய்மையான முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.

ஆன்மீக பாரம்பரியத்தில் நவீனத்துவம்
கீதா பிரஸின் மறுமலர்ச்சிக்கு உதவுவது மற்றும் மகா கும்பமேளாவில் பங்களிப்பைத் தருவதன் ஆகியவை மூலம் அதானி குழுமம் சனாதன மதிப்புகளை மதிக்கும் கலங்கரை விளக்கமாக உருவெடுத்துள்ளது. பாரம்பரியத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு நம்பிக்கையின் கொண்டாட்டம் மட்டுமல்ல.. இந்திய கலாச்சாரத்தில் சேவை எந்தளவுக்கு முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு சான்றாகவும் இருக்கிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications