ஒலியை விட 5 மடங்கு வேகம்.. ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.. வல்லரசுகளை மிரளவைத்த இந்தியா
புவனேஸ்வர்: 1,500 கிலோமீட்டரையும் தாண்டி நீண்டதூரம் சென்று இலக்கை தாக்கும் இந்தியாவின் முதல் ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிக்கரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரையில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் தீவில் இருந்து ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி வெற்றி கண்டதன் மூலம் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது.
நம் நாட்டின் பாதுகாப்புக்காக முப்படைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வான்வெளி பாதுகாப்புக்காக ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில்

நம் நாட்டில் பிரமோஸ் என அழைக்கப்படும் ஹைப்பர்சோனிக் குருஸ் ஏவுகணை உள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக அதிக தொலைவுக்கு சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கம் வகையில் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியை நம் நாடு மேற்கொண்டது.
அந்த வகையில் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் டிஆர்டிஓ மற்றும் பிற தொழில்நிறுவனங்களின் உதவியுடன் நீண்டதூரம் சென்று இலக்குளை தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நேற்று வெற்றி பெற்றுள்ளது. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 150 கிலோமீட்டர் தெலைவில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் தீவில் இருந்து இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை திட்டம் முதல் முறையாக நம் நாட்டில் சோதனை செய்து வெற்றியடைந்துள்ளது. இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனையில் இதுவரை ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தான் வெற்றி கண்டுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக இந்தியாவும் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி சாதனை படைத்துள்ளது.
மேலும் இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணை என்பது சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவுக்கும் அப்பால் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாக கூறப்படுகிறது. இது ஒலியின் வேகத்தை விட 5 முதல் 25 மடங்கு அதிக வேகத்தில் செல்ல கூடியது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ஒரு வினாடியில் 1 முதல் 5 மைல் (1.6 முதல் 8.0 கிலோமீட்டர்/வினாடி) வேகத்தில் சென்று இலக்கை தாக்க கூடியதாகும். இதனை மாக் 5 ஸ்பீடு என்று சொல்வார்கள்.
இந்த வேகத்தை விட குறைவான ஏவுகணைகள் சப்சோனிக் அல்லது சூப்பர்சோனிக் ஏவுகணை என்பார்கள். இந்த வேகத்தை எட்டும் ஏவுகணைகளை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்பார்கள். மேலும் இந்த ஏவுகணை என்பது பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் வகை ஏவுகணையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஹைப்பர்சோனிக் ஏவுகனையின் ரேஞ்ச் என்பது பொதுவாக மணிக்கு 6,125 கிலோமீட்டரில் (மாக் 5)இருந்து மணிக்கு 24,140 கிலோமீட்டர் (மாக் 20) என்ற வேகத்தில் இருக்கும். இதனால் இந்த ஏவுகணையை இடைமறித்து அழிப்பது என்பது எதிரிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். இதனால் சண்டை என்று வந்தால் எதிரி நாட்டை நம் நாட்டில் இருந்து எளிதாக தாக்க முடியும். ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பொறுத்தமட்டில் 2 வகைகள் உள்ளன.
ஒன்று எச்ஜிபி எனும் ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனங்கள். இன்னொன்று ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள். இதல் எச்ஜிபி என்பது ராக்கெட் பூஸ்டர் மூலம் பாலிஸ்டிக் ஏவுகணை போல் ஏவப்படும். இந்த ஏவுகணை குறிப்பிட்ட தூரத்தை அடைந்த பிறகு பூஸ்டரில் இருந்து பிரிந்து இலக்கை தாக்கும். அதேவேளயைில் இன்னொரு வகையான ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை என்பது ஸ்க்ராம்ஜெட் இன்ஜின்கள் மூலம் செயல்படும். இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை வேகத்தில் இயங்கினாலும் கூட குறைந்த உயரத்தில் தான் பறக்கும்.
இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தின் அறிவிப்பில், ‛‛ இந்த ஏவுகணை சோதனை ஒரு வரலாற்று சாதனை. டிஆர்டிஓ உருவாக்கியுள்ள இந்த ஏவுகணை இந்த ஏவுகணை, 1,500 கி.மீ.க்கும் அதிகமான தூரம் வரை பல்வேறு பேலோடுகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற முக்கியமான மற்றும் மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பங்களின் திறன்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் குழுவில் இந்தியாவை இது சேர்த்துள்ளது. இந்த வெற்றிகரமான சோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஆயுதப்படைகள் மற்றும் தொழில்துறையினருக்கு பாராட்டுகள்’’ என்று தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications