ஜார்க்கண்ட்: ரூ15 லட்சம் காப்பீடு; கேஸ் சிலிண்டர் ரூ450..அதிரவிடும் 'இந்தியா' கூட்டணி வாக்குறுதிகள்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் "இந்தியா" கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆர்ஜேடி இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்த தேர்தல் அறிக்கையில் ரூ.15 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்; சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை ரூ450-க்கு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அதிரவைக்கும் பல வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. நவம்பர் 13, நவம்பர் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரு கட்ட தேர்தல் வாக்குப் பதிவுகள் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜார்க்கண்ட் தேர்தல் களத்தில் இந்தியா கூட்டணியாக ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் களம் காண்கின்றன. இந்த கூட்டணியின் சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் ரூ450-க்கு விற்பனை செய்யப்படும்; அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் 500 ஏக்கரில் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்; 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்; ரூ15 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு 28% ஆக அதிகரிக்கப்படும்; தலித்துகளுக்கான இடஒதுக்கீடு 12% உயர்த்தப்படும்; இதர பிற்டுததப்பட்ட ஜாதிகளுக்கான இடஒதுக்கீடு 27% ஆக உயர்த்தப்படும்; பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும்; சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் 'இந்தியா' கூட்டணி தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ரேஷன் கடைகளில் தற்போது வழங்கப்படும் 5 கிலோ உணவு தானியங்கள் 7 கிலோவாக அதிகரிக்கப்படும் என்பதும் இந்தியா கூட்டணியின் வாக்குறுதிகளில் ஒன்று.
விவசாயிகளுக்கும் ஏராளமான வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை வாரி வழங்கி உள்ளது. நெல்லுக்கான குறைந்தபட்சவிலை ரூ2,400-ல் இருந்து ரூ3,200 ஆக உயர்த்தப்படும் எனவும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications