சவுதி அரேபியாவில் பெரும் துயரம்.. இந்தியரை சுட்டு கொன்ற போலீஸ்.. பின்னணியில் பெரிய ஷாக்
ரியாத்: சவுதி அரேபியாவில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அங்குள்ள ஜெட்டா நகரில் சவுதி அரேபியாவின் போலீசாருக்கும், மதுபானம் கடத்தல் கும்பலுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் அந்த இளைஞர் குண்டு பாய்ந்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் துதாபானியா கிராமத்தை சேர்ந்தவர் விஜய் குமார் மகோடோ. இவருக்கு வயது 27. இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியா சென்றார். ஜெட்டா நகரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமான ஹூண்டாய் இன்ஜினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்சன் எனும் நிறுவனத்தில் டவர் லைன் பிட்டராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தான் அவர் வழக்கம்போல் பணிக்கு சென்றார். அப்போது நிறுவனத்தில் பணியாற்றி வரும் மூத்த ஊழியர் ஒருவர் மெட்டீரியல் சாம்பிலை எடுத்து வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து விஜய் குமார் மகோடா அங்கு சென்றார். அப்போது ஜெட்டா நகரில் உள்ள போலீசார் மதுபானம் கடத்தல் கும்பலை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
மதுபானம் கடத்தல் கும்பலுக்கும், சவுதி அரேபியாவின் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. அப்போது அந்த இடத்தை விஜய் குமார் மகோடா கடக்க முயன்றார். அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் விஜய் குமார் மகோடா மீது குண்டு பாய்ந்தது. இதில் அவர் சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜய் குமார் மகோடா பலியாகி உள்ளார்.
முன்னதாக அவர் நடந்த சம்பவம் பற்றி விஜய் குமார் மகோடா தனது வாட்ஸ்அப்பில் மனைவி பசந்தி தேவிக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். குண்டு காயமடைந்து மருத்துவமனை சிகிச்சையில் உள்ளதாக கூறினார். இதை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தாலும் கூட விஜய் குமார் மகோடா உயிருடன் உள்ளதாக நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் தற்போது அவர் இறந்துள்ளார்.
இதனால் விஜய் குமார் மகோடாவின் குடும்பத்தினர் பெரும் துயரத்தில் உள்ளனர்.இவர் தனது மனைவி பசந்தி தேவி, மகன்கள் ரிஷி குமார் (5), ரோஷன் குமார் (3), தாய் சாவித்ரி தேவி, தந்தை சூர்யநாராயண் மகோடா ஆகியோருடன் வசித்து வந்தார். தற்போது அவர்கள் அனைவரின் விஜய் குமார் மகோடாவின் உடலை சவுதி அரேபியாவில் இருந்து ஊருக்கு கொண்டு வர அரசு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
இதுபற்றி புலம்பெயர் தொழிலாளர்களுக்காக செயல்பட்டு வரும் சமூக ஆர்வலர் சிக்கந்தர் அலி கூறுகையில், ‛‛ போலீசுக்கும், மதுபானம் கடத்தல் கும்பலுக்கும் இடையே நடந்த சண்டையில் காயமடைந்ததாக விஜய் குமார் தனது மனைவி பசந்தி தேவிக்கு வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார்.
அவரது மனைவி தான் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். விஜய் குமார் நலமாக இருப்பதாக குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த மாதம் 24ம் தேதியே அவர் இறந்துவிட்டார். இதனை அவரது கம்பெனி உறுதி செய்துள்ளது. இதுபற்றி குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இதுபற்றி விஜய் குமார் வசித்து வரும் கிராமத்தை உள்ளடக்கிய தும்ரி எம்எல்ஏ ஜெய்ராம் குமார் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் முறையாக விசாரணை டத்த வேண்டும். அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உதவி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு சட்டம் மற்றும் நிதி சார்ந்த உதவிகளை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications