140 ஆண்டு வரலாறு மாறுகிறது.. ஜப்பானின் பிரதமராகும் முதல் பெண்.. யார் இந்த சானே தகைச்சி?
டோக்கியோ: ஜப்பான் பிரதமர் பதவியை கடந்த மாதம் ஷிகெரூ இஷிபா ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமர் ரேஸில் சனா தகைச்சி இணைந்தார். இவருக்கு ஆதரவு அதிகரித்த நிலையில் நாடாளுமன்றத்தில் கீழ்சபையில் நடந்த ஓட்டெடுப்பில் அவர் பெரும்பான்மையை பெற்றார். மேல்சபையிலும் அவரது வெற்றி பிரகாசமாக உள்ளது. இதனால் 1985 முதல் இன்று வரையிலான வரலாற்றில் முதல் முறையாக அவர் சானே தகைச்சி முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இந்த சானே தகைச்சி யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஜப்பான் நாட்டில் எல்டிபி எனும் லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியின் ஆட்சி நடக்கிறது. பிரதமராக ஷிகெரூ இஷிபா இருந்தார். ஆனால் அந்த நாட்டில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர் பெரும்பான்மையை இழந்தார். இதையடுத்து கடந்த மாதம் ஷிகெரூ இஷிபா ஜப்பான் நாட்டின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி எழுந்தது. இதில் முன்னிலையில் இருந்த பெயர் தான் சானே தகைச்சி. இவருக்கு வயது 64. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் ஜப்பானின் அடுத்த பிரதமராக அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதையடுத்து ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் ஓட்டெடுப்பு நடந்தது. மொத்தம் 465 உறுப்பினர்களை கொண்ட அந்த சபையில் சனா தகைச்சி 237 ஓட்டுகளை பெற்று வெற்றியடைந்தார்.
இதையடுத்து மேலவையில் ஒட்டெடுப்பு நடைபெற உள்ளது. அதிலும், சனா தகைச்சி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. இந்த வெற்றி சாத்தியமாகும் பட்சத்தில் அவர் ஜப்பானின் 104 வது பிரதமராக பொறுப்பேற்பார்.
அதுமட்டுமின்றி ஜப்பான் பிரதமராகும் முதல் பெண் என்ற பெருமையை பெறுவார். அதோடு 140 ஆண்டு காலமாக ஆண்களால் மட்டுமே பிரதமராக முடியும் என்ற எண்ணத்தை அவர் மாற்றி எழுதுவார்.
ஏனென்றால் ஜப்பானை பொறுத்தவரை பெண்களால் அரசியலில் உச்சபட்ச அதிகாரத்துக்கு வர முடியாத நிலை உள்ளது. இதுவரை ஆண் தலைவர்கள் தான் பிரதமராக இருந்து வந்துள்ளனர். இதன்மூலம் சானே தகைச்சி புதிய வரலாற்றை ஜப்பான் அரசியலில் படைக்க உள்ளார்.
ஜப்பானின் ‛இரும்பு பெண்மணி' என்று அழைக்கப்படும் சானே தகைச்சி மறைந்த பிரிட்டன் பிரதமர் மார்கெரட் தாட்சரை தனது ரோல் மாடலாக கொண்டவர். இவர் கடந்த 1961ம் ஆண்டு பிரந்தார். இவர் தற்போது லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியின் தலைவராக செயல்பட்டுவருகிறார். இந்த பொறுப்பை ஏற்ற முதல் பெண்ணும் இவர் தான்.
இவர் கடந்த 1993 முதல் 2003ம் ஆண்டு வரையும், அதன்பிறகு 2005ம் ஆண்டும் ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ்சபை உறுப்பினராக இருந்தார்.முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, புமியோ கிஷிடா அமைச்சரவையில் பொருளாதாரம், வர்த்தகம், தொழில்துறை அமைச்சராக பணியாற்றினார்.
மேலும் சானே தகைச்சி தனது அமைச்சரவையில் சத்சுகி கடாயமா என்ற பெண் அரசியல்வாதியை இணைத்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது அவரை நிதி அமைச்சராக்க தானே தகைச்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏனென்றால் சானே தகைச்சியின் வலதுகரமாக அவர் செயல்பட்டு வருகிறார். சத்சுகி கடாயமா நிதி அமைச்சராகும் பட்சத்தின் நாட்டின் முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெருமை அவருக்கு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications