நாட்டுடமையான 3 தமிழறிஞர் படைப்புகள்

Subscribe to Oneindia Tamil

தமிழறிஞர்கள் ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்பிரமணியம், ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆகியோரின் நூல்கள்நாட்டுடமையாக்கப்பட்டன.

இதுகுறித்து இன்று (மார்ச் 1) தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புகழ் மிக்க தமிழறிஞர்களின் படைப்புகளை நாட்டுடமையாக்கி அந்த நூல்கள் அனைத்தும் எளிய மக்களைசென்றடைய வேண்டும் என்ற சீரிய நோகக்த்துடன் செயல்பட்டு வருகிறது இந்த அரசு.

அந்த வகையில், புதுமைப்பித்தன், சேது அம்மாள் ஆகியோரின் நூல்களை நாட்டுடமையாக்கி அவர்களதுகுடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவழங்கினார்.

தற்போது தமிழறிஞர்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்பிரமணியம் ஆகியோரின்நூல்களை நாட்டுடமையாக்கி அவர்களது குடும்பத்தாருக்கு தலா ரூ. 5லட்சம் வீதம் மொத்தம் ரூ. 15 லட்சம் பரிவுத்தொகையாக வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ந.மு.வேங்கடசாமி நாட்டார், வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர் சரித்திரம், சோழர் சரித்திரம்முதலிய நூல்களையும், பல ஆராய்ச்சி கட்டுரைகளையும், சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு, ஆத்திச்சூடி,கொன்றை வேந்தன் முதலான பல இலக்கியங்களுக்கு உரைகளையும் எழுதி தமிழுக்கு அணி சேர்த்துள்ளார்.

அவரது படைப்புகளுக்கான பரிவுத் தொகையை நாட்டாரின் மகன் வே.நடராஜன் மற்றும் மரபுரிமை வாரிசுகளானதையல் நாயகி, அம்புஜம், அகிலா, திருஞான சம்பந்தம், சிதம்பரநாதன் ஆகியோரிடம் முதல்வர் வழங்கினார்.

மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரும், புதுக் கவிதை வடிவத்தை செழுமையோடு நிலை நிறுத்தியவருமானநவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான ந.பிச்சமூர்த்தி, 130 கவிதைகள், 130 சிறுகதைகள், 10 நாடகங்கள், 40கட்டுரைகளைப் படைத்துள்ளார்.

அவரது படைப்புகளுக்கான பரிவுத் தொகையை மகள்கள் அலமேலு, ராஜலட்சுமி, மீனாட்சி, சிந்தமாணிஆகியோரிடம் முதல்வர் வழங்கினார்.

திறனாய்வாளர், நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என பல வகைகளில் தன்னைவெளிப்படுத்தி 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 புதினங்கள், 10க்கும் மேற்பட்ட திறனாய்வு நூல்கள், பலகவிதை, கட்டுரைத் தொகுப்புகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகளை எழுதி தமிழுக்கு வளம் சேர்த்தவர்க.நா.சுப்பிரமணியம்.

அவரது படைப்புகளான பரிவுத் தொகையை மனைவி ராஜியிடம் முதல்வர் வழங்கினார் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...