For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிங்கப்பூரில் நடந்த பெற்றோர்களுக்கான இலவச கணித பயிலரங்கு

By Siva
Google Oneindia Tamil News

Free Workshop
சிங்கப்பூர்: சிங்கப்பூர் இந்திய முன்னேற்ற சங்கம் ( Singapore Indain Development Association – SINDA - சிண்டா ) மற்றும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர் கிளை ஆகியவை இணைந்து நடத்திய பெற்றோர்களுக்கான இலவச கணிதப் பயிலரங்கு கடந்த 19ம் தேதி சிங்கப்பூரில் நடந்தது.

“உங்கள் குழந்தைகள் கணிதத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெற எவ்வாறு உதவலாம்?” என்ற தலைப்பிலான பயிலரங்கு சிங்கப்பூர் பீட்டி சாலையில் அமைந்துள்ள சிண்டா தலைமையகத்தில் மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 1 மணி வரை நடந்தது.

சுமார் 80க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த பயிலரங்கை ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவரும், 26 ஆண்டுகள் அனுபவம் பெற்ற கணித விரிவுரையாளருமான திரு. அமானுல்லா வழி நடத்தினார். சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமுதாயப் பணிகள் ஆற்றுவதை பிரதான நோக்கமாகக் கொண்ட ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பங்களிப்பை பாராட்டும் வண்ணம் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

சங்கத் தலைவர் முஹிய்யத்தீன் அப்துல் காதர் பயிலரங்கின் துவக்க உரையில் ஜமால் முஹம்மது கல்லூரியின் 61 ஆண்டு கால உயர்கல்வி சாதனைகளையும்,பெருமைகளையும் பற்றி எடுத்துரைத்தார். சிண்டா அதிகாரிகள், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து பயன்பெற்ற இப்பயிலரங்கு மதிய உணவுடன் இனிதே நிறைவுற்றது.

English summary
Singapore Indian Development Association(SINDA) and Jamal Mohamed college alumni association (Singapore chapter) conducted a free workshop for parents on february 19 in SINDA HQ, Singapore. Professor P M A Amanullah gave a speech titled ' How to help your children to score better in mathematics'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X