For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கா: அப்துல்கலாம் தமிழ் பள்ளியில் பட்டமளிப்பு விழா.. மழலையர்களின் பறையாட்டத்தால் களைகட்டியது!

அமெரிக்காவில் உள்ள அப்துல்கலாம் தமிழ் பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா, ஜல்லிக்கட்டு 2018 கலைநிகழ்ச்சியில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

Google Oneindia Tamil News

இலியனாய்: அமெரிக்காவில் உள்ள அப்துல்கலாம் தமிழ் பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா, ஜல்லிக்கட்டு 2018 கலைநிகழ்ச்சியில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவின் இலியனாய், ப்ளூமிங்டனில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் தமிழ்ப்பள்ளியின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும், மெக்லீன் மாவட்ட தமிழ் சங்கத்தின் ஜல்லிக்கட்டு 2018 என்ற கலைநிகழ்ச்சியும் ஹெயிடன் கலையரங்கத்தில் இனிதே நடைபெற்றது.

முதல் நிகழ்ச்சியாக நமது பள்ளியின் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடினர். அடுத்ததாக பள்ளியின் முன்னாள் முதல்வர் உமா கைலாசம் வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் முதல்வர் அய்யனார் கலாம் சிறப்புரை ஆற்றினார்.
பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் 65 மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.

அமெரிக்காவில் தமிழ்பள்ளி

அமெரிக்காவில் தமிழ்பள்ளி

அடுத்ததாக மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் ��டைபெற்றது. நிகழ்ச்சிகளை ஆசிரியை மங்களேஸ்வரி மற்றும் மாணவ மாணவியர் தொகுத்து வழங்கினார்கள். முதல் நிகழ்ச்சியாக மாணவர் சர்வேஷ்குமார் (மழலையர் வகுப்பு 2) திருக்குறள் ஒப்புவித்தார். அடுத்து வந்த மாறுவேட நிகழ்ச்சியில் விவசாயி , ஆசிரியர், ராணுவ வீரர் மற்றும் டாக்டர்.அப்துல் கலாம் விஞ்ஞானியாக (பாலர் வகுப்பு 1) குழந்தைகள் வந்து அசத்தினார்கள்.

மழலையர்களின் பறையாட்டம்

மழலையர்களின் பறையாட்டம்

இதைத்தொடர்ந்து "தமிழ் இனி மெல்ல தழைக்கும்" என்று பாலர் வகுப்பு 2 குழந்தைகள் நாடகமாக நடித்து காட்டியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அடுத்து வந்த மழலையர் வகுப்பு 1 குழந்தைகள் கிராமிய நடனம் மற்றும் கோலாட்டத்தில் அசத்தினர். இந்த கலைநிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக "ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்" என்று ராஜ ராஜ சோழனை நம் கண்முன்னே நடித்து காட்டினார்கள் மழலையர் வகுப்பு 2 குழந்தைகள் , பின்னர் வந்த அதே வகுப்பை சேர்ந்த குழந்தைகளின் "பறை ஆட்டத்தில்" அரங்கமே அதிர்ந்தது.

உலக நியதிகள்

உலக நியதிகள்

முதல் வகுப்பு மாணவ மாணவியர் பாரதியார் பாடலும் மற்றும் "சுட்டிஸ் பஞ்சாயத்து" என்னும் நிகழ்ச்சியும் நடத்தினார்கள். வில்லுப்பாட்டு இல்லாத தமிழர் கலை நிகழச்சியா என்பதற்கேற்ப இரண்டாம் வகுப்பு மாணவ மாணவியர் தமிழைப்பற்றி வில்லுப்பாட்டு இசைத்தனர். இதனிடையில் மாணவர் கெளதம் பாரதியார் பாடல் பாடினார். மாணவி அயன்ஸி உலக நியதிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இத்துடன் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.

இளந்தளிர் 2வது இதழ்

இளந்தளிர் 2வது இதழ்

இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து தந்த அனைவருக்கும் பாராட்டும் விருதுகளும் வழங்கப்பட்டது.
மேலும் நமது பள்ளியின் நூலகம் மற்றும் இளந்தளிர் செய்திமடல் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பாராட்டும் விருதுகளும் வழங்கப்பட்டது. இளந்தளிர் இரண்டாவது இதழ் வெளியிடப்பட்டது.

தமிழை காப்போம்

தமிழை காப்போம்

மெக்லீன் மாவட்ட தமிழ் சங்க தலைவர் கிருஷ்ணா அவர்களுக்கும் நமது பள்ளியின் நிறுவனர் உமா கைலாசம் அவர்களுக்கும் பள்ளிக்கு உறுதுணையாக இருக்கும் ரத்னகுமார் அவர்களுக்கும் பள���ளியின் சார்பில் கௌரவிக்கப்பட்டது. இறுதியாக பள்ளி துணை முதல்வர் ரவிசங்கர் அவர்கள் நன்றியுரையுடன் , பள்ளியின் "தமிழைக் காப்போம்" என்று உறுதி மொழி பள்ளியின் ஆசிரிய ஆசிரியைகள் எடுத்துக்கொண்டனர்.
விழா இனிதே நிறைவடைந்தது.

English summary
In US Dr.Abdul Kalam Tamil school convacation function held with Parai dance and culturals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X