For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"காகிதப் பூக்கள்".. புத்தம் புதிய நெடுந்தொடர் - அத்தியாயம் 3

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 3வது அத்தியாயம் இது.

Google Oneindia Tamil News

- லதா சரவணன்

"ஈஸ்வர் வித்யா மட்டுமல்ல, எனக்குமே பயமாகதான் இருக்கிறது.. ஜீவனை மீட்டுட முடியுமா? பணம் பற்றிக் கவலையில்லை.."

"எல்லா பெற்றவங்களும் பிள்ளை மேலுள்ள பாசத்தில் சொல்றதுதான் கவின் இந்த வார்த்தை. முதலில் என் கேள்விகளுக்கு ஒழுங்கா பதில் சொல்லு... போன் வந்ததா சொன்னியே? மொபைலிலா..? லேண்ட்லைனிலா...?"

கவின் மொபைல் போனைத்தர, அதில் சற்று முன் வந்த எண்ணைக் குறித்துக்கொண்டான். "அடுத்த முறை போன் வந்தால், பேச்சை வளர்க்கப்பாரு, பையனைப் பார்க்காமலோ, அல்லது பேசாமலோ பணம் தர முடியாதுன்னு போல்டா பேசு,,,! உன் குரல் பிசிறு தட்டக் கூடாது... தைரியம் தேவை...."

Kakithapookkal Part 3

தலையசைத்தான் கவின். விட்டால் அழுதுவிடுவான் போல் இருந்தது..

ஈஸ்வர் தன் செல்லில் இருந்து கண்ட்ரோல் ரூமிற்குத் தொடர்பு கொண்டான். 'நான் ஒரு போன்நம்பர் தர்றேன். அது என்ன லிமிட் டவர் எங்கேயிருக்குன்னு டிரேஸ் பண்ணுங்க. நம்பர் யார் பேர்ல இருக்குன்னும் தெரியனும். எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் வரணும். அப்புறம் கவினின் செல் நெம்பர் தந்து அந்த போனிற்கு வரும் கால்களை டேப் பண்ணச் சொன்னான்.

"எஸ் ஸார்....."

மறுபடியும் ஸ்டேஷனுக்குப் போன் செய்து," ஹலோ துரை"

"ஸார்...."

"கார் நம்பர் TN3026 ஸ்கார்பியோ டார்க் க்ரே கலர் , சிட்டி லிமிட் தாண்டி எங்கேயும் போயிடக்கூடாது. எல்லோ லிமிட்டுக்கும் இன்பார்ம் பண்ணுங்க.... அந்த வண்டி கண்ணில் பட்ட அடுத்த நிமிடம் எனக்கு தகவல் வரணும். "

"சரி சார்.."

ஈஸ்வர் போன் பேசி வைத்துவிட்டு, டீ யுடன் வந்த வித்யாவை நோக்கினான். பேச முற்பட்ட விநாடி, மறுபடி கவினின் செல் அழைக்க....!

"ஹலோ...! "அதே கரகரப்பான குரல்..

"இம்முறை டிஸ்பிளேயில் வேறு எண்ணில் இருந்து வந்தது. என்ன கவின் முடிவு பண்ணிட்டியா? "

"பணம் பிரச்சனையில்லை,,,, ஆனா நீ சொல்றது உண்மைதான்ங்கிறதுக்கு என்ன ஆதாரம்...? நான் உன்னை எப்படி நம்பறது?"

"கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணச் சொல்றியா?"

"தேவையில்லை எம் பிள்ளையை பார்க்கணும்"

"பார்க்கலாம்.. பணம் தந்தபிறகு,,,,,,?!"

"அட்லீஸ்ட் அவன் குரலையாவது கேட்கணும்.?!" அவன் ஜீவனிடம் போனைத் தந்திருப்பான் போலும்

"டாடி....மகனின் குரல் கேட்டதும் அலறிவிட்டாள் வித்யா.... கண்ணா எங்கேடா இருக்கே?"

"மம்மி....!" விம்மலுடன் வெடித்தது ஜீவனின் குரல்,,,

அதற்குள் அவன் போனை பிடுங்கி விட்டிருந்தான். "அதான் பேசியாச்சு இல்லே.., பணத்தை ரெடி பண்ணு .," மறுபடியும் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இம்முறை ஈஸ்வரின் போன் அலற, "சொல்லுங்க துரை"

"ஸார் நீங்க சொன்ன கார் அடையார் போற வழியில் ஆள் அரவமற்ற ரோட்டில் நிக்குது. டிரைவருக்கு விபத்து ஆகி பக்கத்திலே இருக்கிறே ஆஸ்பிட்டலில் அட்மிட் பண்ணி இருக்காங்களாம்.?!"

"இஸிட்....!"

"அப்புறம் நீங்க தந்த போன் நெம்பருக்கு இரண்டு கால் வந்திருக்கு, இரண்டுமே வேறவேற நம்பர், முதல் வந்த போன்நம்பர் அட்ரஸ் புருப் எல்லாம் போர்ஜரி ஸார்.. ஆனா இரண்டு எண்ணுக்கும் டவர் திருவான்மியூரில் இருந்துதான் கிடைக்குது."

"தேங்க்ஸ் துரை... நீங்க திருவான்மியூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு நாம் வர்றோம்ன்னு தகவல் தெரிவியுங்கள். உடனே புறப்பட்டு திருவான்மியூர் வந்திடுங்க.."

"எஸ் ஸார்....."

கவின் நண்பனின் முகத்தினை ஆர்வமாய் பார்த்தான்... "கவின் ஒரு சின்ன க்ளூ கிடைச்சிருக்கு.. அநேகமா எப்படியும் இரவுக்குள்ளே ஜீவன் இங்கேயிருப்பான்.!"

"நிஜமா அண்ணா..,.!"

"கட்டாயம் வரேன்!"

"நானும் வர்றேன் ஈஸ்வர்.... ?!"

"வேண்டாம் கவின்... நீயும் கூட வந்திட்டா பாவம் அண்ணி ரொம்பவும் பயந்து போயிடுவாங்க,,,,நீ இரு.. ஜீவனை நான் கூட்டிட்டு வந்திடறேன்.."

"அண்ணா உங்களைத்தான் மலைபோல நம்பி இருக்கேன்.!"

"உங்க நம்பிக்கை நிச்சயம் பலிக்கும்....!" ஈஸ்வர் வேகமாய் புறப்பட்டான்.

"மார்னிங் ஸார்.! துரை விஷ் பண்ணிட வேற ஏதாவது தகவல் வந்ததா?"

(தொடரும்)

English summary
Wtier Latha Saravanan's new series Kakithappokkal. The story talks about the life a boy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X