• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரிழிவு நோயாளிகளும் சந்தோசமா மாம்பழம் சாப்பிடலாம்!

By Mayura Akilan
|

மாம்பழ சீசன்ல வீட்ல எல்லோரும் தட்டு நிறைய மாம்பழம் வச்சு சாப்பிடும் போது நீரிழிவு நோயாளிகள் மட்டும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

இனி அந்த ஏக்கம் வேண்டாமாம் நீரிழிவு நோயாளிகளும் மாம்பழம் சாப்பிடலாம் என்று சந்தோச பாலை வார்த்துள்ளனர் ஆய்வாளர்கள்.

முக்கனிகளின் ஒன்றான மாம்பழம் எண்ணற்ற சத்துக்களைக் கொண்டுள்ளது.

நம்நாட்டில் மட்டும் ஆயிரம் வகை மாம்பழங்கள் காய்க்கின்றன.

தமிழ்நாட்டு சந்தைகளிலேயே ருமானி, அதிமதுரம், முண்டப்பா, பஞ்சவர்ணம், நீலம், பங்கனப்பள்ளி, ஒட்டு மாம்பழம் பலவகையான மாம்பழங்கள் காய்த்து கனிகின்றன.

கரோட்டீன் சத்து

கரோட்டீன் சத்து

மாம்பழங்களில் அதிக அளவில் கரோட்டீன் சத்து உள்ளது. அல்போன்சா வகை மாம்பழத்தில் எக்கச்சக்கமான பீட்டா கரோட்டீன் சத்தும், பங்கனப் பள்ளி மற்றும் பெத்தராசலு வகைகளில் மிதமான அளவு பீட்டா கரோட்டீன் சத்தும் உள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே மாலைக்கண் போன்ற கண் தொடர்பான நோய்களுக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

மாம்பழத்துக்கு ரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் ரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும். இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.

கர்ப்பிணிகளுக்கு மாம்பழம்

கர்ப்பிணிகளுக்கு மாம்பழம்

கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டமாக இருக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது என்கின்றன ஆய்வுகள்.

மாதவிடாய் காலத்தில்

மாதவிடாய் காலத்தில்

நல்ல கனிந்த மாம்பழங்களைச் சாப்பிட்டால் மாதவிலக்கு ஒழுங்குபடும். அதேசமயம் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில் சாப்பிட்டால் ரத்தப்போக்கு அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.

பல்நோய்களை போக்கும்

பல்நோய்களை போக்கும்

மாம்பழம் பல் நோய்களையும் போக்கும். பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கி வாயில் போட்டு ஈறுகளில் படும்படி வைத்திருந்து 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்துத் துப்பிவிட்டால் பல்நோய் நீங்கிவிடும். சிறு நீர்ப் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்துக்கு உண்டு.

மலச்சிக்கல் நீங்கும்

மலச்சிக்கல் நீங்கும்

இரவில் மாம்பழம் சாப்பிட்டுவிட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா என்ற சந்தோகம் உண்டு. அச்சப்படாமல் தாராளமாக சாப்பிடலாம் என்கின்றனர் ஆய்வாளர்.

தினம் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் அதிக கொழுப்புச் சத்து, நீரிழிவு ஆகியவற்றை வருமுன் தடுக்கலாம் என சமீபத்திய ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மருந்தாகும் மாம்பழம்

மருந்தாகும் மாம்பழம்

மாம்பழத்தில் உள்ள சில வேதிப் பொருட்கள் அதிகக் கொழுப்பு மற்றும் நீரிழிவுக்கு எதிரான மருந்துகளைப் போல செயல்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அளவோடு உண்ணலாம்

அளவோடு உண்ணலாம்

ஆனால் சர்க்கரை நோயாளிகள், ஆய்வுகளே சொல்லிவிட்டன, இனியென்ன என்று இஷ்டம் போல மாம்பழத்தை 'வெட்டாதீர்கள்'. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். எனவே மருத்துவர்கள் ஆலோசனைப்படி உண்ணலாம் என்கின்றனர்.

புற்றுநோய் மருந்து

புற்றுநோய் மருந்து

மாம்பழத்துக்கு புற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருக்கிறதா என்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The most popular fresh fruit in the world, mangoes are a whole lot more than just a delicious, refreshing treat produced by nature. As evidenced by copious scientific research, mangoes are also a powerful medicinal food, as they contain nutrients that can help clear up skin, promote eye health, stave off diabetes, and even prevent the formation and spread of cancer.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more