ஏழ்மை- பத்மப்ரியா
பள்ளிவிட்டு ஓடிவந்ததும்
கட்டிக்கொண்டு முகம் புதைக்க
எப்போதும் வீட்டினில்
மெத்தென்று அம்மா
கடலை உருண்டை கைமுறுக்கு
எள்ளுருண்டை அப்பமென்று
வகைக்கொன்றாய் தின்று
வளர்ந்தாயிற்று
பதினெட்டு வரை
பசி அறியாமல்
பள்ளியில் தோழியருடன்
சண்டையென்றாலும்
வழியில் ரோமியோக்களின்
தொல்லை என்றாலும்
ஓடிவந்து சொல்ல
எப்போதும் வீட்டினில்
புன்னகையுடன் அம்மா
அம்மாவின் கதகதப்பும்
அவளது வாசனையும்
தந்த பாதுகாப்பை
எந்த ஆயுள் காப்பீட்டுக் கழகமும்
தரவில்லை எனக்கு
பசிக்கும்போது உணவளிப்பவள்
அம்மா எனில்
குளிர்பதனப்பெட்டி என்மகளுக்கு அம்மா
சொல்லித் தந்து வல்லவனாக்குதல்
தந்தைக்குக் கடமையெனில்
தொலைக்காட்சிப்பெட்டி அவளுக்கு அப்பா
பகிர்ந்து கொள்ளவும் பாதுகாப்பளிக்கவும்
எந்தப்பெட்டி உள்ளதெனச் சொன்னால்-
அந்தப்பெட்டியையும் வாங்குவேன் விரைந்து
என் மகளுக்காக
ஏன் எனில்
நான் வேலைக்குப் போகும் அம்மா அல்லவா?
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications