சுனாமி- வைரமுத்து
ஏ கடலே!
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன்முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்
ஏ கடலே!
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா!
முதுமக்கள் தாழியா?
நீ கலங்களின் மைதானமா?
பிணங்களின் மயானமா?
துக்கத்தை எங்களுக்குத் தந்துவிட்டு
நீ ஏன் கறுப்பை அணிந்திருக்கிறாய்?
உன் அலை
எத்தனை விதவைகளின் வெள்ளைச்சேலை?
நீ தேவதை இல்லையா
பழிவாங்கும் பிசாசா?
உன் மீன்களை நாங்கள்
கூறுகட்டியதற்கா
எங்கள் பிணங்களை நீ
கூறுகட்டுகிறாய்?
நீ அனுப்பியது
சுனாமி அல்ல
பிரளயத்தின் பினாமி
பேய்ப்பசி உன்பசி
பெரும்பசி
குமரிக்கண்டம் கொண்டாய்
கபாடபுரம் தின்றாய்
பூம்புகார் உண்டாய்
போதாதென்று
உன் டினோசர் அலைகளை அனுப்பி
எங்கள்
பிஞ்சுக் குழந்தைகளின்
பிள்ளைக்கறி கேட்கிறாய்
அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?
என்ன பிழை செய்தோம்?
ஏன் எம்மைப் பலிகொண்டாய்?
சுமத்ராவை வென்றான்
சோழமன்னன் ராஜராஜன்
அந்தப் பழிதீர்க்கவா
சுமத்ராவிலிருந்து சுனாமி அனுப்பிச்
சோழநாடு கொண்டாய்?
காணும் கரைதோறும்
கட்டுமரங்கள் காணோம்
குழவிகளும் காணோம்
கிழவிகளும் காணோம்
தேசப்படத்தில் சில கிராமங்கள் காணோம்
பிணங்களை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள்
பிணத்தையே காணோம்
மரணத்தின் மீதே
மரியாதை போய்விட்டது
பறவைகள்
மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய்வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை
அழுதது போதும்
எழுவோம்
அந்த
மொத்தப் பிணக்குழியில்
நம் கண்ணீரையும் புதைத்து விடுவோம்
இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு
இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்
நாம் மனிதர்கள்
எதிர்கொள்வோம்
மீண்டும் கடலே
மீன்பிடிக்க வருவோம்
ஆனால்
உனக்குள் அஸ்திகரைக்க
ஒருபோதும் வரமாட்டோம்...
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications