பிளாஷ் பேக் 2021 : நடிகர்கள் கட்சி படுதோல்வி அடையும்... பஞ்சாங்கம் கணித்தது பலித்தது
புத்தாண்டு பிறக்கப் போகிறது. 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை பஞ்சாங்கத்தில் கணித்த சம்பவங்கள் எந்த அளவிற்கு பலித்தன என்பதை சற்றே திரும்பி பார்க்கலாம்.
சென்னை: பிலவ வருட பஞ்சாங்கத்தில் பருவமழை, வெள்ளம் பற்றியும், இந்தியாவில் ஏற்படும் வெள்ள பாதிப்பு பற்றியும் தமிழகத்தின் மழை வெள்ள பாதிப்பு பற்றியும் கணிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் பஞ்சாங்கம் கணித்து அப்படியே பலித்தவை என்னென்ன என்று பார்க்கலாம். சட்டசபை தேர்தலில் நடிகர்கள் கட்சி படுதோல்வி அடையும் என்று பஞ்சாங்கம் கணித்தது பலித்துள்ளது.
நவ கிரகங்களின் பயணங்களை வைத்து நம்முடைய முன்னோர்கள் பஞ்சாகத்தை கணித்து எழுதியுள்ளனர். சூரிய கிரகணம், சந்திர கிரகணம், விலைவாசி உயர்வு, பங்குச்சந்தை வர்த்தகம், தங்கம், வெள்ளி விலை உயர்வு, வீழ்ச்சி என அனைத்தையும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
பூமியில் எங்கெங்கு பூகம்பம் ஏற்படும், மழை வெள்ள பாதிப்பு ஏற்படும், புயல் தாக்கும் எனவும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. வானிலை மைய அறிக்கை மழை பாதிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வெளியாகும் நிலையில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்கு முன்பே நடக்கப் போவதை பஞ்சாங்கத்தில் கணித்து எழுதியுள்ளனர் நமது முன்னோர்கள். பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ள பல விசயங்கள் பலித்துள்ளன.

தேர்தலில் படு தோல்வி
ஆற்காடு பஞ்சாங்கத்தில் சட்டசபைத் தேர்தலில் நடிகர்களின் கட்சி படுதோல்வி அடையும் என்றும் பழம் பெரும் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க நேரிடும் என்றும் பஞ்சாங்கம் கணித்திருந்தது. அது போலவே நடிகர்களின் கட்சி படுதோல்வியை சந்தித்தது. பழம் பெரும் கட்சியான திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது.

மழை வெள்ளம் பாதிப்பு
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித்தீர்த்தது. வடகிழக்குப் பருவமழையும் அபரிமிதமாக பெய்தது. தாமிரபரணி, காவிரி, தென்பெண்ணை, பாலாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேட்டூர் அணை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல அணைகள் நிரம்பி வழிகின்றன. மழை வெள்ளம் பற்றி பிலவ வருட பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. பிலவ ஆண்டிற்கு திருக்கணிதப்படி செவ்வாய் ராஜாவாக வருவதால் இரண்டு மரக்கால் மழை பொழியும் என கணிக்கப்பட்டுள்ளது.

கிரக ரீதியான காரணம்
தமிழ் ஆண்டில் குரு பகவான் 3 ராசிகளில் பயணம் செய்தால் உலகின் 3ல் ஒரு பங்கு மக்கள் மடிவார்கள் என ஜகத் சிருஷ்டி ஜாதகம் மற்றும் காலவிதானம் என்ற ஜோதிட சாஸ்திர நூல்களில் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசியது. குரு பகவான் நடப்பாண்டு மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பயணம் செய்வதால் கொரோனாவால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகினர். பல லட்சம் பேர் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர்.

கொரோனா தடுப்பூசி
பிலவ வருட பஞ்சாங்கத்தின் படி தமிழ் புத்தாண்டு பிறக்கும் போது லக்னத்தில் சனிபகவான் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் புதுவித வைரஸ் உருவாகும் என கணிக்கப்பட்டிருந்தது. அது போலவே உருமாறிய டெல்டா கொரோனாவால் பலரது உயிர் பறிபோனது. குரு பகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்து 6,8,10ஆம் இடங்களைப் பார்வையிடுவதால் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பழைய நோய்களின் தாக்கம் குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் வெள்ளம்
இந்த ஆண்டு காய்கறிகள் விலை வாசி உயரும் என்றும் கோவில்களுக்கு மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படும் எனவும் பஞ்சாங்கம் கணித்தது போலவே காய்கறிகள் கிலோ 150 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. தக்காளி கிலோ 160 வரை தொட்டது. முருங்கைக் காய் கிலோ 400 ரூபாய் வரை உயர்ந்தது இந்த விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பெருமழையால் தமிழகத்தில் பிரபலமான பல கோவில்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

நகை விலை உயரும்
2021ஆம் ஆண்டில் தங்கம் வெள்ளி விலை உயரும் எனவும் பின்னர் வைகாசி ஆனி மாதத்தில் விலை குறைந்து பின்னர் சீராக இருக்கும் எனவும் புரட்டாசி ஐப்பசி மாதங்களில் தடுமாற்றத்துடன் இருந்த தங்கம் விலை பின்னர் உயர ஆரம்பிக்கும் எனவும் பஞ்சாங்கம் கணித்தது போலவே நடந்தது. பங்குச்சந்தை விலை சீராக உயர்ந்து கொண்டே செல்லும் என்று சொன்னது போல மிகப்பெரிய உச்சத்தை தொட்டது. நவகிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து கணிக்கப்பட்ட பல சம்பவங்கள் 2021ஆம் ஆண்டு பலித்துள்ளன. அதே நேரத்தில் சில சம்பவங்கள் பலிக்காமல் போயுள்ளன.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications