For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் திருவிழா - 6 சப்பரம் அழகா வருவதை பார்க்க கல்லுப்பட்டிக்கு வாங்க

தேவன்குறிச்சி,டி.கல்லுப்பட்டி , வன்னிவேலம்பட்டி ,வி.அம்மாபட்டி,காடனேரி,கிளாங்குளம்,சத்திரப்பட்டி ஆகிய ஏழு கிராமங்களிலும் 7 ஊர் முத்தாலம்மன் கோவில் திருவிழா இரண்டு வருடத்திற்கு ஒரு முறை சிறப்பாக க

Google Oneindia Tamil News

மதுரை: டி. கல்லுப்பட்டியில் ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் திருவிழா களைகட்டியுள்ளது. கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலம்பட்டி, காடனேரி,கிளாங்குளம்,சத்திரப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து ஆறு சப்பரங்கள் செய்து வந்து முத்தாலம்மனை அம்மாபட்டியிலிருந்து அவரவர் ஊருக்கு அழைத்துச் சென்று வழிபடுவர்

இந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் வெளியூர்கள், வெளிநாடுகளில் வேலைக்காக சென்றிருந்தாலும் ஏழு ஊர் முத்தாலம்மன் திருவிழாவில் பங்கேற்க சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள் என்பதுதான் சிறப்பம்சம்.

ஜாதி பேதமின்றி, அரசியல் கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் விழா என்பது இந்த விழாவின் சிறப்பு. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவிற்கான காரணம் பற்றி கர்ண பரம்பரை கதையாக கூறப்படுகிறது.

திருவிழாவிற்கான காரணம்

திருவிழாவிற்கான காரணம்


சுமார் 600 ஆண்டுகளுக்கு மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகள் மழை தண்ணீர் எதுவுமின்றி பஞ்சத்தால் பாதிக்கப்பட்டன. அந்த நேரத்தில் ஒரு பெண்மணி 6 பெண் குழந்தைகளுடன் கல்லுப்பட்டிக்கு வந்தார். அவர்களை ஊர் தலைவரும் மக்களும் உபசரித்து பாதுகாத்தனர். ஏழு பேரும் வந்து தங்கியதில் கல்லுப்பட்டியிலும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்தது. கிராம மக்களின் வறுமையும் நோயும் நீங்கியது. ஏழுபேரும் ஊரை விட்டு புறப்பட தயாராகினர்.

ஏழு சக்திகள்

ஏழு சக்திகள்

அப்போது ஊர் தலைவரும் கிராம மக்களும் அவர்களை தடுத்தனர். கிராமத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்று வேண்டினர். அதற்கு அவர்கள் ஏழுபேரும், கூறிய தகவல் ஆச்சரியமானதாக இருந்தது. நாங்கள் தெய்வீக பிறவிகள். இந்த பூலோகத்தில் இருந்து கிளம்பும் நேரம் வந்து விட்டது. தீக்குளிக்கப் போகிறோம். எங்களின் சாம்பலை சுற்றியுள்ள கிராமங்களில் தூவுங்கள் என்று கூறினர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழாவாக கொண்டாடுங்கள் என்று கூறினர். இதன் நினைவாகவே முத்தாலம்மன் கோயில் திருவிழா, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐப்பசி மாதம் கொண்டாடப்படுகிறது.

ஏழு கிராமத்தில் வழிபாடு

ஏழு கிராமத்தில் வழிபாடு

முத்தாலம்மனை தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தி, கல்லுப்பட்டியில் சரஸ்வதி, வன்னிவேலம்பட்டியில் மகாலட்சுமி, வை.அம்மாபட்டியில் பைரவி, காடனேரியில் திரிபுரசுந்தரி, கிளாங்குளத்தில் சபரி, கி.சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாக வழிபடுகின்றனர்.

ஏழூர் அம்மன் திருவிழா கடந்த புதன்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியுள்ளது. அம்மாபட்டியில் அம்மன் இருப்பதால் அந்த ஊர் தவிர கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலம்பட்டி, காடனேரி, கிளாங்குளம், சத்திரப்பட்டி ஆகிய 6 கிராமங்களில் சப்பரங்கள் வடிவமைக்கும் பணி துவங்கியுள்ளது.

ஏழு ஊர் சப்பரம் விழா

ஏழு ஊர் சப்பரம் விழா

நவம்பர் 1ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை கல்லுப்பட்டி உட்பட 6 கிராமங்களிலிருந்து சப்பரங்களை பக்தர்கள் தலையில் சுமந்து, அம்மாபட்டிக்கு கொண்டு வந்து அம்மனை அவரவர் ஊர்களுக்கு அழைத்து செல்வார்கள். கிராமங்களில் சப்பரம் செய்யும் பணி களை கட்டியுள்ளது. இந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் வெளியூர்கள், வெளிநாடுகளில் வேலைக்காக சென்றிருந்தாலும் ஏழு ஊர் முத்தாலம்மன் திருவிழாவில் பங்கேற்க சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள் என்பதுதான் சிறப்பம்சம். ஜாதி பேதமின்றி, அரசியல் கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் விழா என்பது இந்த விழாவின் சிறப்பு.

புகைப்படங்கள்: ராகா

English summary
In Madurai District T.Kallupatti Muthalamman temple 7 Villages Car Festival held on November 1. Seven villages people during first week of November which is incredible and a rare kind of event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X