திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருமலை திருப்பதியில் இரண்டு ஆண்டுக்கு பிறகு தெப்ப உற்சவ தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம் நடைபெறுவதால் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஐந்து நாட்கள் நடைபெறும் தெப்ப திருவிழாவைக் காண பல்லாயிரக்கணக்கானோர் திருப்பதியில் குவிந்துள்ளனர்.
திருப்பதியில் ஆண்டு தோறும் 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் தெப்ப உற்சவத்தை விமரிசையாக நடத்த தேவஸ்தானம் முடிவு செய்தது.
அதன்படி முதல் நாள் தெப்ப உற்சவம் ஞாயிறு இரவு தொடங்கியது. வரும் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடக்கிறது. தெப்பல் உற்சவம் தொடங்கியதையொட்டி ஏழுமலையான் கோவிலில் தினசரி நடைபெறும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராமர் சீதா தெப்ப உற்சவம்
முதல் நாளன்று ஸ்ரீ சீதா, ராமர், லக்ஷ்மணர் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்ட தீர்த்தவாரி குளத்தில் மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உலா வந்தனர். 3 சுற்றுகள் வலம் வந்தனர்.
தெப்ப உற்சவத்தில் வேதம், பாட்டு, நாதம் ஆகியவற்றுக்கு இடையே தெப்பல் உற்சவம் நடந்தது. 2 ஆண்டுக்கு பிறகு தெப்ப உற்சவ தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.

புஷ்கரணியில் குவிந்த கூட்டம்
புஷ்கரணி முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வந்தனர். இதனால் அலிபிரி சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருப்பதியில் ஞாயிறன்று 74,167 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 33,976 பேர் முடி காணிக்கை செலுத்தினர் ரூ.4.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

ஸ்ரீகிருஷ்ணர் ராதா ருக்மணி
தெப்ப உற்சவம் தினமும் 7 மணி முதல் 8 மணி வரை உற்சவம் நடைபெறுகிறது. முதல் நாள் மாலை ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி ஸ்ரீ சீதா லட்சுமணர் ஆஞ்சநேயருடன், 2ஆம் நாள் ஸ்ரீ கிருஷ்ணர், ராதா, ருக்மணியுடன் தெப்ப உற்சவம் நடக்கிறது.

மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி
3வது நாள் மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன், 4வது நாள் 5 சுற்றுகளும், 5வது நாள் 7 சுற்றுகளும் வலம் bந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர். தெப்ப உற்சவ விழாவையொட்டி தெப்பக்குளம் முழுவதும் வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது. திருமலை ஏழுமலையான் கோவில் பூலோக சொர்க்கமாக மாறியுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications