சித்ரா பவுர்ணமிக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல அனுமதி: பல லட்சம் பக்தர்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமி நாளில் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அன்னதானம் வழங்க விருப்பமுள்ளவர்கள் உரிய ஆதாரங்களுடன் வரும் 14ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து அனுமதி ஆணை பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

பஞ்சபூதத் தலங்களில் தேயு தலம் என்றும் நெருப்புத் தலம் என்றும் பயபக்தியுடன் போற்றி வணங்கப்படும் கோயில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். இத்தல இறைவனான சிவபெருமான் மலையாக இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருவதால், 14 கி.மீ சுற்றளவுள்ள அண்ணமலையை நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டுச் செல்வதுண்டு.

அமாவாசை, பௌர்ணமி மற்றும் விடுமுறை நாட்களில் என்றால் நாடு முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் வருவதுண்டு. குறிப்பாக திருக்கார்த்திகை நாளில் மட்டுமே சுமார் இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வணங்கிச் செல்வார்கள். அதேபோல் சித்ரா பௌர்ணமி நாளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதுண்டு.

வழிபாட்டு தலங்களில் அனுமதி

வழிபாட்டு தலங்களில் அனுமதி

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் கொரோனோ நோய்த் தொற்றின் தாக்கம் இருந்ததால், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் வழிபாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் முற்றிலும் குறைந்துவிட்டதால், கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வழக்கமான பூஜைகளும் திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம்

அதே போல், கிரிவலத்திற்கு புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலிலும் சித்ரா பௌர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது. இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி வரும் ஏப்ரல் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் வருகிறது.

15 லட்சம் பக்தர்கள்

15 லட்சம் பக்தர்கள்

அன்றைய தினம் சுமார் பதினைந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரிவலம் வரும்போது, தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அன்னதானம் வழங்க விருப்பமுள்ளவர்கள், வரும் ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து அனுமதி ஆணை பெற வேண்டும்.

 அன்னதானத்திற்கு விண்ணப்பம்

அன்னதானத்திற்கு விண்ணப்பம்

மேலும், விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முகவரிக்கான ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு சான்றிதழ் மற்றும் 3 பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்களுடன் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி தவிர்த்து 14ஆம் தேதி வரை நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை

பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை

அன்னதானம் வழங்கும் போது எக்காரணத்தை முன்னிட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. இலையால் ஆன தென்னை மட்டை, பாக்கு மட்டை பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குப்பைக் கூடைகளை அன்னதானம் அளிப்பவர்களே கொண்டுவரவேண்டும். அன்னதானம் வழங்கும் இடங்களில் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்கள் அவ்வப்போது உரிய ஆய்வு செய்யவேண்டும்.

அன்னதானம்

அன்னதானம்

அன்னதானம் முடிந்தவுடன் அந்த இடங்களை முழுமையாக சுத்தம் செய்த பின்னரே செல்ல வேண்டும். அதற்கு ஏற்றார்போல் போதுமான நபர்களையும் உடன் அழைத்து வரவேண்டும். முறையான அனுமதி இல்லாமல் அன்னதானம் அளிப்பவர்கள் மற்றும் அனுமதி அளிக்கப்பட்ட இடம் தவிர்த்து வேறு இடங்களில் அன்னதானம் வழங்குபவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+