For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம தீபம் ஏற்றுங்கள்... தடைகள் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்

தன திரயோதசி நாளில் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும்,சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தான

Google Oneindia Tamil News

சென்னை: எம தீபம் ஏற்றுவதன் மூலம் மறைந்த நம்முடைய முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நம்முடைய குடும்பம் விருத்தியடையும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும்,சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

தீபாவளித் திருநாளன்று, நாம் செய்யும் பூஜையையும், படையலையும் பித்ருக்கள் சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டு, நம்மை ஆசீர்வதித்து, பின்னர் அவர்களது உலகுக்குத் திரும்புகின்றனர் என்பது ஐதீகம். எனவேதான் தீபாவளித் திருநாளில் பித்ருக்களை அவசியம் வழிபட வேண்டும். இதனால் மறைந்த நம் முன்னோர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது எம தீபம் மட்டுமே. இதனால், முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவாராம். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை ஏற்படாது நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

தடைகள் விலகும்

தடைகள் விலகும்

தீபாவளிக்கு முதல் நாளில் திரயோதசி திதியில் எம தீபம் ஏற்ற வேண்டும். நாளை 13ஆம் தேதி எம தீபம் ஏற்றலாம். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும்,சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும். அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கியும் எம தீபம் ஏற்றலாம்.

எம தீபம் ஏற்றுங்கள்

எம தீபம் ஏற்றுங்கள்

பரணி, மகம், சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் எம தீபம் ஏற்றுவது சிறப்பு. பரணி நட்சத்திரத்திற்கு எமன் அதிபதி. மகம் நட்சத்திரத்திற்கு பித்ருக்களை அதிதேவதையாக கூறியுள்ளனர். வருஷாதி நூல்களில் சதயத்திற்கு எமனை அதிதேவதையாக கூறப்பட்டுள்ளது.

எம தீபம் ஏற்றுங்கள்

எம தீபம் ஏற்றுங்கள்

எமனை அதிதேவதையாக கொண்ட சனீஸ்வர பகவான் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்றவர்கள். ஆயுள் ஸ்தானத்தில் சனீஸ்வர பகவான் நீசம் அல்லது பலமிழந்தவர்கள் எம தீபம் ஏற்றலாம். சூரியனும் சனீவரரும் சேர்க்கை பெற்றவர்கள். ஆயுள் ஸ்தானாதிபதி ருத்ரனை அதிதேவதையாக கொண்ட திருவாதிரை அல்லது ருத்ரனை அதிதேவதையாக கொண்டவர்கள். எம தீபம ஏற்றுவது சிறப்பு

யமுனை நதிக்கரையில் தீபம்

யமுனை நதிக்கரையில் தீபம்

அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கி யம தீபம் ஏற்றலாம். அனைத்து சனி பரிகார ஸ்தலங்களிலும் அனைத்து சிவாலய சனீஸ்வரர் சன்னதிகளிலும் எம தீபம் ஏற்றலாம். எமனின் சகோதரியான யமுனை நதிக்கரையில் ஏற்றலாம். அனைத்து காலபைரவர் சன்னதிகளிலும் ஏற்றலாம்.

எம தீபங்கள் எட்டு

எம தீபங்கள் எட்டு

எம தீபம் குறிப்பாக துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. எவரேனும் மரணமடைந்தால் மட்டுமே யம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது. யம தீப வழிபாடாக, எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும், இல்லத்திலும், எட்டுத் திக்குகளிலும் தாமரைத் தண்டுத் திரிகளை வைத்து ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று, அந்தந்த திக்குகளை தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கிப் பிரார்த்திக்க வேண்டும். எமபயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணைபுரிவீர்களாக என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.

வீட்டிற்குள் தெற்கு நோக்கி ஏற்றுங்கள்

வீட்டிற்குள் தெற்கு நோக்கி ஏற்றுங்கள்

உங்கள் வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். வசதி இல்லை எனில் வீட்டிற்குள்ளும் ஏற்றலாம். தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும். விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் மனதால் நினைத்து வணங்க வேண்டும்.

English summary
Deepavali falls on the new moon night on Aipaasi month. Deepavali in south gets its name like deepa. Goddess Lakshmi will not enter a dark house. The lamps also welcome home the spirits of dead ancestors, who are believed to visit on this auspicious night.Yama Deepam on Friday November 13, 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X