தனுசு ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
தனுசு ராசிக்கார அன்பர்களே! உங்கள் புத்திசாலித்தனத்தால் வியாபாரம் பெருகும். நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் நீங்கள் நினைத்தது நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் மறைந்து மன நிம்மதி கிடைக்கும். உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் உங்களுக்கு வந்து சேரும். நண்பர்களால் நன்மை உண்டாகும். தொட்ட காரியத்தில் தடங்கல் இல்லாமல் வெற்றி பெறும் நிலை உருவாகும். அரசாங்க உதவிகள் தாராளமாக வந்து சேரும்.
மூல நட்சத்திரக்காரர்களுக்கு நல்லது நடக்கும்.
பூராட நட்சத்திரக்காரர்கள் வெற்றி பெறுவார்.
உத்திரம் நட்சத்திரக்காரர்கள் பெருமை அடைவார்கள்.
இன்று உங்கள் பலம்:
எல்லா வகையிலும் உங்களுக்கு ஒருவர் உதவியாக இருப்பார். கேட்ட இடத்தில் தாராளமாக பண உதவி கிடைக்கும்.
இன்று உங்கள் பலவீனம்:
திட்டமிட்டு காரியம் செய்ய முடியாத நிலை ஏற்படும். சில நேரங்களில் ஒரு முறைக்கு இருமுறை அலைய வேண்டும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 வெளியிடத்தில் அனாவசியமாக வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
2 தொழில்துறைகளில் உள்ள சிரமத்தை கண்காணிக்க வேண்டும்.
3 உடல் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 3,6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கரு நீலம்.
வணங்க வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி.
| தேதி | 5 - கார்த்திகை - பராபவ வருடம் சனி |
| நாள் | சனி |
| திதி | ஏகாதசி (up to 6:32 am) துவாதசி (up to November 22, 4:57 am) திரயோதசி (up to November 23, 2:37 am) |
| நட்சத்திரம் | உத்திரட்டாதி (up to 6:50 am) ரேவதி (up to November 22,5:54 am) அஸ்வினி (up to November 23,4:15 am) |
| யோகம் | மரண-சித்த யோகம் |
| நல்ல நேரம் | 7:45 - 8:45 am / 12:15 - 1:15 pm |
| கௌரி நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 9:30 - 10:30 pm |
| இராகு காலம் | காலை 9.00 - 10.30 |
| எமகண்டம் | மதியம் 1.30 - 3.00 |
| குளிகை | காலை 6.00 - 7.30 |
| சூலம் | கிழக்கு |
| பரிகாரம் | தயிர் |
| சந்திராஷ்டமம் | உத்திரம் |
| சூரியோதயம் | 6:14 AM |
| சூரிய அஸ்தமனம் | 5:35 PM |
| சந்திரோதயம் | Nov 21 2:49 PM |
| சந்திர அஸ்தமனம் | Nov 22 3:35 AM |