For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குரு பெயர்ச்சி 2021: குரு தசையில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்காரருக்கு தேடி வரும்

சுப கிரகமான குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவரது தசா புத்தி காலத்தில் ஜாதகருக்கு நல்ல யோகங்களை வாரி வழங்குவார். குரு தசை காலத்தில் கோடீஸ்வர யோகம் தேடி வரும்.

Google Oneindia Tamil News

மதுரை: பொன்னவன் குருபகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவரது தசாபுத்தி காலத்தில் அள்ளிக்கொடுப்பார். தன காரகன், புத்திரகாரகன். குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் அவரது தசாபுத்தி காலத்தில் கோடீஸ்வர யோகத்தைக் கொடுப்பார். எனவேதான் ஒருவருக்கு கோச்சார ரீதியாக குருபெயர்ச்சி பலன்கள் சொல்லும் போதே உங்கள் ஜாதகத்தில் குருவின் நிலை எப்படி இருக்கிறது. தசாபுத்தி என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து அதற்கேற்ப பரிகாரம் செய்யச் சொல்கின்றனர் ஜோதிடர்கள்.

குருபகவான் பொன்னவன். குரு பார்க்க கோடி நன்மை. குரு நின்ற இடம் பாழ், பார்க்கும் இடம் சுபிட்சம் என்றெல்லாம் ஜோதிட ரீதியான பழமொழிகள் உண்டு. குரு முழுமையான சுப கிரகம் என்பதால் அவரது பார்வைக்கு எத்தகைய தோஷத்தையும் போக்கும் வலிமை உள்ளது. குரு, தனம் மற்றும் புத்திர காரகன் என்பதால் அவரது தசாபுத்தி காலத்தில் பணம் அதிகமாகப் புரளும் இடங்களிலோ, பணத்தை வைத்துச் செய்யும் தொழில்களிலோ இருக்க வைப்பார்.

ஒருவரின் ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால் பணம் அதிகம் புரளும் இடங்களில் வேலை கிடைக்கச் செய்வார் நகை, நிதித்துறை போன்ற தொழில்களை செய்ய வைப்பார். வலுப்பெற்ற குரு பத்தாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில், ஒருவரை பணத்தை இரட்டிப்பாக்கும் வட்டித் தொழில் மற்றும் ஜுவல்லரி போன்றவைகளில் ஈடுபட வைத்து பெரிய லாபங்களைத் தருவார். ஒருவரின் ஜாதகத்தில் குரு ஆறு, எட்டு போன்ற இடங்களில் மறைந்தோ, பகை, நீசம் பெற்றோ இருந்தால் சனி, ராகு போன்ற பாபக் கிரகங்களுடன் தொடர்பு கொண்டோ இருந்தால் தன லாபத்தை தடை செய்வார், புத்திரபாக்கிய தடையும் ஏற்படும்.

5 நாட்களுக்கு இடியுடன் மிக கனமழை வெளுக்கும்....குடையில்லாமல் வெளியே கிளம்பாதீங்க 5 நாட்களுக்கு இடியுடன் மிக கனமழை வெளுக்கும்....குடையில்லாமல் வெளியே கிளம்பாதீங்க

குரு தரும் ஹம்ச யோகம்

குரு தரும் ஹம்ச யோகம்

பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்சயோகம் குரு பகவானால் ஏற்படுவது ஆகும். ஒருவரது சுய ஜாதகத்தில் குரு கேந்திர ஸ்தானம் எனப்படும் 1, 4,7,10 ஆகிய நான்கு இடங்களில் ஏதாவது ஒன்றில் இருக்க வேண்டும். அது குருவின் சொந்த வீடுகளான தனுசு மீனம் அல்லது உச்ச வீடான கடகம் ஆகிய ராசிகளாக இருக்க ஹம்ச யோகம் உண்டாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவும் பெருந்தன்மையுடனும் செயல்படும் தன்மை கொண்டவர்கள். பலரால் போற்றப்படுபவராகவும் மற்றவர்களை விட தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள் என்றும் ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குரு ஹம்ச யோகம் தரும் நிலையில் குருவின் நண்பர்களான சந்திரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் குருவைப் பார்த்தாலோ, இணைந்தாலோ யோகம் இன்னும் வலுப்பெறும்.

யோகம் பெறும் ராசிக்காரர்கள்

யோகம் பெறும் ராசிக்காரர்கள்

சர லக்னங்களான மேஷம், கடகம், துலாம், மகர லக்னத்தில் பிறந்தவர்கள் குருவால் உண்டாகும் ஹம்ச யோகத்தின் முழுப் பலனையும் அனுபவிப்பவர்கள் உபய லக்னங்களான தனுசு, மீனம், மிதுனம், கன்னிக்கும் இந்த யோகம் அமையப் பெறும். ஆனால் குருவின் கேந்திராதிபத்ய தோஷத்தினால் அவர்களுக்கு யோகம் முழுமை பெறாது. சர லக்னங்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றும், உபய லக்னங்களுக்கு தனுசு, மீனத்தில் ஆட்சி பெற்றும் ஹம்ச யோகத்தை அளிப்பார். இந்த அமைப்பில் குரு பலம் பெறுவதால் அவரது சுப காரகத்துவங்கள் ஜாதகருக்கு மேலோங்கி நிற்கும். உபய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் இருந்தால் மட்டுமே குரு முழு யோகம் அளிப்பார்.

கும்ப குரு தரும் யோகம்

கும்ப குரு தரும் யோகம்

குருப்பெயர்ச்சி நவம்பர் மாதம் நிகழப்போகிறது. மகர ராசியில் சனியோடு உள்ள குருபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகப்போகிறார். குருவின் பார்வை கும்ப ராசியில் இருந்து மிதுனம், சிம்மம், துலாம் ராசிகளின் மீது விழுகிறது. இந்த குரு பெயர்ச்சியால் தனுசு, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலனையும் யோகத்தையும் பெறப்போகிறார்கள். குரு பெயர்ச்சியால் யோகம் பெறுவதோடு குரு தசை நடைபெற்றால் கோடீஸ்வர யோகத்தையும் கிடைக்கச் செய்வார் குருபகவான்.

காப்பாற்றும் குரு பகவான்

காப்பாற்றும் குரு பகவான்

செவ்வாயின் ஆதிக்கத்துக்குட்பட்ட மேஷ லக்னத்திற்கு குரு 9 மற்றும் 12ஆம் அதிபதி. அதே போல விருச்சிக லக்னத்திற்கு குரு 2 மற்றும் ஐந்தாம் அதிபதி. இந்த இரண்டு ராசி லக்னகாரர்களுக்கும் குரு பகவான் தனது தசையில் மிகச் சிறந்த யோகங்களை அளிப்பார். அதே போல கடகம், சிம்மம் லக்ன காரர்களுக்கும் தனது தசையில் யோகங்களையே செய்வார். இந்த நான்கு லக்னங்களுக்கும் வலிமையற்ற நிலையிலோ, மறைவு பெற்றோ, பகை, நீசம் பெற்றிருந்தாலும் கூடுமானவரை கெடுதல்களைச் செய்ய மாட்டார். கை தூக்கி விட்டு காப்பாற்றுவார்.

திருமண யோகம்

திருமண யோகம்

ரிஷபம், துலாம் லக்னக்காரர்களுக்கு குரு பகவான் எப்போதுமே பெரிதாக நன்மை செய்வதில்லை. காரணம் குருவின் எதிரி சுக்கிரன். ரிஷப லக்னத்திற்கு எட்டிலும், துலாம் லக்னத்திற்கு ஆறாம் வீட்டிலும் அமர்ந்து ஆட்சி பலம் பெற்று சுப கிரகங்களின் பார்வையோ தொடர்போ ஏற்பட்டால் மட்டுமே நல்லது நடக்கும். மிதுனம் மற்றும் கன்னி லக்னக்காரர்களுக்கு குரு பகவான் கேந்திரமான 4, 7 , மற்றும் 10ஆம் வீட்டில் அமரும்போது யோகம் தருவார். நல்ல வாழ்க்கைத்துணையும் பிள்ளைகளால் பெருமையும் தேடி வரும்.

குருவினால் யாருக்கு யோகம்

குருவினால் யாருக்கு யோகம்

மகரம், கும்பம் லக்னகாரர்களுக்கு குரு யோகாதிபதி இல்லை என்றாலும் கடகத்தில் உச்சம் பெற்ற குரு மகரத்தை பார்த்தால் தசையில் நன்மை நடைபெறும். அதே போல கும்ப லக்ன காரர்களுக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் குரு அமரும் போது நன்மை நடக்கும். தனுசு, மீனம் ராசிக்கு குரு அதிபதி என்றாலும் கேந்திரங்களில் அமர்ந்தால் கேந்திராதிபத்ய தோஷம் வரும். அதே நேரத்தில் தனுசு லக்ன காரர்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றால் நன்மை, அது எட்டாவது வீடான மறைவு ஸ்தானமாகவே இருந்தாலும் நல்லது நடக்கும். மீனம் ராசிக்காரர்களுக்கு உச்சம் பெற்றாலும் அதிகம் நன்மை இல்லை அதே நேரம் விருச்சிகமான ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து மீனம் ராசியைப் பார்ப்பதன் மூலம் வலிமை கிடைக்கும்.

குரு பரிகாரத்தலம்

குரு பரிகாரத்தலம்

ஜாதகத்தில் குரு வலிமை இழந்திருக்கும் நிலையில் நவ கிரகத் தலங்களில் குருவிற்கு வியாழன் தோறும் விளக்கேற்றி வழிபடலாம். திருச்செந்தூர் குருபரிகார தலம்தான். அங்கு சென்று திருச்செந்தில் ஆண்டவனையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கலாம். ஜென்ம நட்சத்திர நாளில் பரிகாரம் செய்வதுதான் நன்மையை தரும். ஒரு வியாழக்கிழமை குருவின் ஹோரையில் குருவின் வாகனமான யானைக்கு, விருப்பமான உணவு கொடுக்கலாம்.

English summary
If the auspicious planet Guru Bhagavan is in a good position in one's horoscope, he will give good yogas to the horoscope during his Dasa Buddhi period. Guru Musa will be looking for millionaire yoga during the period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X