Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2024: வேலையில் புரமோசன்.. குரோதி ஆண்டில் வருமானத்தை அள்ளித்தரும் குரு பகவான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்க குருபகவானின் அனுக்கிரகம் அவசியம். குரு பகவான் ஒருவருக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும் கிரகம். குரோதி தமிழ் புத்தாண்டு பிறந்த சில நாட்களில் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. மே 1ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்வதால் யாருக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும் என பார்க்கலாம். எந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்: குடும்ப குரு குபேர யோகத்தை தரப்போகிறார். சித்திரை மாதம் முதல் 2ஆம் வீட்டில் அமரும் குரு பகவான் உங்களுடைய வேலையில் முன்னேற்றத்தையும் புரமோசனையும் தரப்போகிறார். நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்வும் பொருளாதார மாற்றமும் ஏற்படப்போகிறது. வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரப்போகிறது. குரோதி ஆண்டு முதல் மேஷ ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

Guru peyarchi palan 2024 Who will get good job and Promotion from Krodhi Tamil New year

கடகம்: கடகம் ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு அற்புதமான குரு பெயர்ச்சியாக உள்ளது. லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். இடமாற்றங்கள் ஏற்படும். பத்தில் குரு பதவியை தேடித்தருவார் என்றாலும் மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். வீண் தர்க்கம் வேண்டாம்.

கன்னி: பாக்ய ஸ்தான குரு பகவான் கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. சகலவிதமான நன்மைகளை தரப்போகிறது. படிப்பில் இருந்த தடை, வேலையில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் ஒன்றிணைவார்கள். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் லாபமும் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். குரோதி ஆண்டில் குபேர யோகம் தேடி வரப்போகிறது.

விருச்சிகம்: சித்திரை முதல் சிறப்பான யோகம் தேடி வரப்போகிறது. குரு பகவானின் நேரடி பார்வையில் அமர்ந்துள்ளீர்கள். குரு பெயர்ச்சியால் தொட்டது துலங்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

மகரம்: வேலை இல்லையே என்று கவலைப்பட்ட மகரம் ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் கூடிய நல்ல சம்பளம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் பலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். சுப காரியங்கள் கை கூடி வரும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். குரோதி ஆண்டு முதல் வெற்றி மீது வெற்றி வந்து சேரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். குருபகவானின் பார்வையும் கிடைப்பதால் வருமானம் பல வழிகளில் இருந்தும் தேடி வரும். திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+