For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளி: இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா

வட இந்தியா முதல் தென் இந்தியா வரையிலும் தீபாவளி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. எந்த மாநிலத்தில் தீபாவளி எப்படி கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: நம் நாட்டில் ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு பண்டிகை இருந்தாலும், அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக கொண்டாடும் ஒரே பண்டிகை என்றால் அது இந்த தீபாவளித் திருநாள் தான். நம் தமிழ்நாட்டில் கார்த்திகை மாதம் தான் தீபத் திருநாளாக கொண்டாடப்பட்டாலும், மற்ற மாநிலங்களில் தீபாவளியை தான் தீபத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். வட இந்தியா, தென் இந்தியா, கிழக்கு இந்தியா, மேற்கு இந்தியா மாநிலங்களில் தீபாவளி கொண்டாடும் முறை பற்றி பார்க்கலாம்.

தீபாவளிப் பண்டிகை என்றாலே சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். என்னதான் நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், அவரவர் வசதிக்கு ஏற்ப அனைத்து மதத்தினரும் கொண்டாடும் ஒரே பண்டிகை இந்த தீப ஒளித் திருநாள் தான். இத்திருநாளை அனைவரும் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் வீட்டிற்கு புதிய பொருட்களின் வரவு தான்.

தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு புராண இதிகாச கதைகள் சொல்லப்பட்டாலும் கூட, இக்கதைகள் அனைத்தும் நமக்கு வலியுறுத்துவது தீமைகளை அழித்து மக்களின் மனதில் மகிழ்ச்சியை மலரச் செய்த நன்னாள் என்பது தான். இதைக் கொண்டாடவே, நாட்டு மக்கள் அனைவரும் எந்தவித மதவேறுபாடும் இல்லாமல் போட்டி போட்டுக்கொண்டு புத்தாடை, இனிப்புகள், பட்டாசு என இந்நன்னாளில் அமர்க்களப்படுத்துகின்றனர்.

 நரகாசூர வதம்

நரகாசூர வதம்

நரகாசூரனை கிருஷ்ண பரமாத்மா வதம் செய்த நாளாகவே தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறோம். நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து கறி சமைத்து சாப்பிடுவதுதான் தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாட்டமாகும்.

 அயோத்தி திரும்பிய ஸ்ரீ ராமர்

அயோத்தி திரும்பிய ஸ்ரீ ராமர்

தென்னிந்திய மாநிலங்களில் தீபாவளியை ஒரு மாதிரியாக கொண்டாடினாலும், வட இந்தியாவில் சில மாநிலங்களில், ஸ்ரீராமபிரான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்து தன் குடும்பத்தோடு அயோத்தி நகரத்திற்கு திரும்பிய நன்னாளையே தீபாவளியாக கொண்டாடிவருகின்றனர்.

 வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு

வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு

ஸ்ரீராமபிரான் வனவாசம் சென்றதால் ஒளியிழந்து களையிழந்த தங்கள் அயோத்தி மாநகரம், ஸ்ரீராமபிரான் திரும்பி வந்த உடன் ஒளிபெற்றதாக கருதி பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்து கொண்டும் பட்டாசுகளை வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த கொண்டாட்டம் உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், பீஹார், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த பாராம்பரிய பழக்க வழக்கமானது இன்றும் தொடர்ந்து இருந்து வருகிறது.

 லட்சுமி பூஜை வழிபாடு

லட்சுமி பூஜை வழிபாடு

இந்த மாநிலங்களில் தீபாவளி தினத்தன்று இரவில் மக்கள் லட்சுமி பூஜை செய்கின்றனர். ஒரு டம்ளர் பாலில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்து பூஜிக்கின்றனர். குபேர லட்சுமி பூஜை செய்வதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

 தீபங்கள் ஏற்றும் சீக்கியர்கள்

தீபங்கள் ஏற்றும் சீக்கியர்கள்

பஞ்சாபில், 1577ஆம் ஆண்டில் இத்தினத்தில் தான் தங்கள் புனித திருத்தலமான பொற்கோவில் கட்டுமானப் பணியை துவங்கினர். அதைக் கொண்டாடவே தீபாவளித் திருநாளன்று இரவில் சீக்கியர்கள் தங்கள் வீடுகளிலும், குருத்வாராக்களிலும் தீபங்களையும் மெழுகுவர்த்திகளையும் ஏற்றி வைத்து தீபாவளித் திருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

 புத்தாண்டு கொண்டாடும்

புத்தாண்டு கொண்டாடும்

குஜராத் மாநிலத்தை பொறுத்தவரையில், தீபாவளித் திருநாளை புத்தாண்டு தினமாக கொண்டாடி மகிழ்கின்றனர். அன்றைய தினத்தில் புதிய சொத்துக்கள் வாங்குவது, புதிய தொழில்கள் தொடங்குவது, அலுவலகங்கள் கடைகள் திறப்பது, திருமணம் செய்வது என நல்ல காரியங்களை செய்வதற்கு உகந்த நாளாக கருதுகின்றனர். மேலும் தீபாவளி நாளன்று இரவில் மாநிலம் முழுவதும் தியா என்ற பெயரில் விளக்குகளை ஏற்றி வைத்து வணங்குகின்றனர். இதனால் அந்த ஆண்டு முழுவதும் மழை வளத்தையும் செல்வச் செழிப்பையும் கொண்டு வரும் என்பது நம்பிக்கையாகும்.

 5 நாட்கள் தீபாவளி பண்டிகை

5 நாட்கள் தீபாவளி பண்டிகை

தென்னிந்தியாவில் மஹாராஷ்டிராவில் தீபாவளிப் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளன்று பசுவழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மூன்றாம் நாளான தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்து, பின்பு புத்தாடைகளை அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கின்றனர். மேலும், தம்முடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கின்றனர். நான்காவது நாளான லட்சுமி பூஜையன்று ஒவ்வொரு வீட்டிலும் பணம் மற்றும் நகைகளை லட்சுமி தேவியாக பாவித்து வணங்குகின்றனர்.

 சத்ரபதி சிவாஜி

சத்ரபதி சிவாஜி

மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி தன்னுடைய எதிரிகளின் கோட்டையை தாக்கி கைப்பற்றியது இந்த தீபாவளி நாள். அதனால் தான் இது தன திரயோதசி என்றும் தாந்தராஸ் என்றும் கொண்டாடப்படுகிறது.

 காளி பூஜை கொண்டாட்டம்

காளி பூஜை கொண்டாட்டம்

மேற்கு வங்கத்தில் தீபாவளித் திருநாள் காளி பூஜையாக வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் பல்வேறு பகுதிகளில் காளி தேவியின் சிலைகள் வைக்கப்பட்டு அதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதோடு மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவிலுள்ள சில கிராமங்களில் மக்கள் தீபாவளித் திருநாளன்று தங்கள் முன்னோர்களின் ஆன்மாவை சொர்க்கத்திற்கு வழியனுப்பும் நாளாக கருதி கொண்டாடுகின்றனர்.

 நரக சதுர்த்தசி

நரக சதுர்த்தசி

நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில், தீபாவளிப் பண்டிகை மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய நாளான அஸ்விஜா கிருஷ்ண சதுர்த்தசி அன்றே மக்கள் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை அணிந்து தீபாவளியை கொண்டாடுகின்றனர். தீபாவளி முடிந்த மறுநாள் அன்று பாலிபத்யாமி என்று கொண்டாடுகின்றனர்.

சத்யபாமா

சத்யபாமா

ஆந்திர மாநிலத்தில், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மனைவி சத்யபாமா நரகாசுரனை கொன்ற நாளாக கருதி தீபாவளித் திருநாளை கொண்டாடுகின்றனர். அன்றைய நாளில் சத்யபாமாவின் களிமண் சிலைகளுக்கு பூஜைகள், பிரார்த்தனைகள் செய்து வழிபட்டு தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

 அசோக விஜயதசமி

அசோக விஜயதசமி

சமண மதத்தவர்கள், மஹாவீரர் நிர்வாணம் அடைந்த நாளையே புனித நாளாக கருதி, அத்தினத்தை தீபாவளித் திருநாளாக கொண்டாடுகின்றனர். புத்த மதத்தினர், மாமன்னர் அசோக சக்கரவர்த்தி தன்னுடைய அரச பதவியை முற்றிலும் துறந்து புத்த மதத்துக்கு மாறிய நாளையே தீபாவளித் திருநாளாக கொண்டாடுகின்றனர். இந்நாளை அசோக விஜயதசமி என்று அழைக்கின்றனர். அதோடு, அசோகர் தன்னுடைய திக்விஜய யாத்திரையை முடித்துவிட்டு நாட்டிற்கு திரும்பிய நாள் தீபத் திருநாளாக கொண்டாடப்பட்டது. பிற்காலத்தில் அந்த நன்னாளே தீபாவளித் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

English summary
Let’s look at these few unique and interesting Deepavali traditions followed in various parts of the nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X