கன்னி ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
கன்னி ராசி அன்பர்களே! வெற்றிகள் வீடு தேடி வரும் நாள். அரசு உதவிகள் கிடைக்கும். அரசு வேலையில் உங்கள் திறமைக்கேற்ற மரியாதை வந்து சேரும். அதனால் பதவி உயர்வும் ஏற்படும். சிலருக்கு பணி மாறுதல்கள் கிடைக்கலாம். வாகன லாபங்கள் உண்டாகும். மனைவியின் பாசம் மகிழ்ச்சி ஏற்படுத்தும். தனதானிய லாபங்கள் அதிகரிக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நிலை ஏற்படும். தாய் தந்தையர்கள் ஆசி கிடைக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல பலன் அடைவார்கள்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் பெறுவார்கள்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன பலன் அடைவார்கள்.
இன்று உங்கள் பலம்:
புதிய தொழிலில் வரும் வருமானம் மனதிற்கு தெம்பை கொடுக்கும். அரசாங்க பெரிய மனிதரின் செல்வாக்கு துணையாய் நிற்கும்.
இன்று உங்கள் பலவீனம்:
சில நேரங்களில் கோபத்தால் நிதானம் தவறுவீர்கள். என்ன செய்கிறோம் என்ற தெரியாத நிலை சிக்கலை கொடுக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 அதிக வட்டிக்கு கடன் வாங்க கூடாது.
2 புதியவர்களிடம் பணப் பொறுப்பை ஒப்படைக்க கூடாது.
3 குடும்பத்தினரிடம் மனதில் இருக்கும் விஷயங்களை மறைக்கக்கூடாது.
அதிர்ஷ்ட எண்: 1,9
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு.
வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
| தேதி | 20 - புரட்டாசி - பராபவ வருடம் புதன் |
| நாள் | புதன் |
| திதி | துவாதசி (up to 11:17 pm) திரயோதசி (up to October 08, 10:16 pm) |
| நட்சத்திரம் | மகம் (up to 9:40 pm) பூரம் (up to October 08,9:20 pm) |
| யோகம் | சித்த-அமிர்த யோகம் |
| நல்ல நேரம் | 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm |
| கௌரி நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm |
| இராகு காலம் | மதியம் 12.00 - 1.30 |
| எமகண்டம் | காலை 7.30 - 9.00 |
| குளிகை | காலை 10.30 - 12.00 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | உத்திராடம், திருவோணம் |
| சூரியோதயம் | 6:02 AM |
| சூரிய அஸ்தமனம் | 5:51 PM |
| சந்திரோதயம் | Oct 07 2:51 AM |
| சந்திர அஸ்தமனம் | Oct 07 3:36 PM |