கன்னி ராசிக்கு செவ்வாய், சனியின் இணைவால் வரும் அதிர்ஷ்டம்.. நினைத்த காரியங்கள் கைகூடப் போகுது
வார ராசி பலன்: ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான ஆடி 26 முதல் ஆவணி 1 வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு செவ்வாய், சனி இணைந்திருப்பதால் நிறைய பேருக்கு பதவிகள் கிடைக்கும். நிறைய பேச்சு வார்த்தைகள் வெற்றி பெறும். வரும் ஒன்றரை மாதத்துக்குள் முக்கியமான அறிவிப்பு வெளியாகும். எந்தக் கட்சி கூட்டணியில் இருக்கப் போகின்றது என்பது போன்ற அறிவிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும். கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய், சனி இணைவு மிகப்பெரிய ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அனுகூலம்
நிறைய பேருக்கு பதவி உயர்வு, வெற்றிகள், பொருளாதார ஏற்றம், நினைத்த காரியங்கள் கைகூடுவது போன்ற அனுகூலங்கள் காணப்படும். பெரிய நம்பிக்கை உருவாகும். சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும். உங்களுடைய இலக்குகளை டக்கு டக்கென்று முடிக்க கூடிய காலகட்டம். நரசிம்மர் வழிபாடு அற்புதமான மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
சுபவிரையம்
சுப விரைய பிராப்தம் மிகவும் அதிகரிக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றமும், நம்பிக்கையும் உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும்.
முருகன் வழிபாடு
எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். முருகன் வழிபாடு சகல விதத்தில் ஏற்றத்தையும், நம்பிக்கையையும் தரும். விலை உயர்ந்த பொருள்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. சந்தோஷம், பொருளாதார ரீதியாக 95 சதவீதம் முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
ராஜயோகம் பெறும் கடக ராசி.. ஜூன் மாதத்தில் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்











Click it and Unblock the Notifications