திருக்கார்த்திகை தீபம், காலபைரவாஷ்டமி கைசிக ஏகாதசி - கார்த்திகை மாத விஷேச நாட்கள்

கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம், காலபைரவாஷ்டமி, கைசிக ஏகாதசி என பல முக்கிய தினங்கள் உள்ளன. கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திகை மாதம் விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். ஆன்மீக அலைகள் நிரம்பி வழியும் மாதம். தினந்தோறும் தீபம் ஏற்றி வழிபடலாம். திருக்கார்த்திகை தீபம், கால பைரவாஷ்டமி உள்ளிட்ட பல முக்கிய விரத தினங்கள் உள்ளன. முக்கிய முகூர்த்த தினங்களும் உள்ளன. விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.

கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.

 Karthigai matha pirappu important days viratha days

கார்த்திகை மாத முதல் நாளில் முடவன் முழுக்கு என்று குறிப்பிட்டிருப்பார்கள். இந்த நாளில் காவேரியில் நீராடினால் ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும் என்பது ஐதீகம். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கார்த்திகை மாத சிறப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன. கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு,தீப ஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.

கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ரமா ஏகாதசி கைசிக ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது. கார்த்திகை மாதப் பவுர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும். கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.

கார்த்திகை மாதத்தில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்க நாயனார், சிறப்புலி நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமபயம் நீங்கும். நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும்.

கார்த்திகை மாத விஷேச நாட்கள்

கார்த்திகை 1 நவம்பர் 17 புதன்கிழமை முடவன் முழுக்கு காவிரியில் நீராட சகல தோஷங்களும் நீங்கும்.

கார்த்திகை 2 நவம்பர் 18 வியாழன் கிழமை சந்திர ஜெயந்தி. நவகிரகங்களில் சந்திரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி வழிபடலாம்.

கார்த்திகை 3 , நவம்பர் 19 வெள்ளிக்கிழமை பரணி தீபம், திருக்கார்த்திகை தீபம் அண்ணாமலையார் கோவிலில் மலை மீது மகா தீபம்

கார்த்திகை 07ஆம் தேதி செவ்வாய்கிழமை அங்காரக சதுர்த்தி விநாயகரை வழிபட நன்மைகள் நடைபெறும்

வாஸ்து நாள் கார்த்திகை 8 நவம்பர் 24 சனிக்கிழமை வாஸ்து நேரம் காலை 11.14 முதல் 11.50 வரை.

கார்த்திகை 11 நவம்பர் 27 சனிக்கிழமை காலபைரவாஷ்டமி இன்று காலபைரவரை வணங்க நல்ல நாள்.

கார்த்திகை 22 டிசம்பர் 06 புதன் கிழமை நாக பஞ்சமி, இன்று நாக தோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாள்.

கார்த்திகை 28 டிசம்பர் 14 செவ்வாய்கிழமை ஏகாதசி இன்று கைசிக ஏகாதசி. பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+