For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகை மாதம்... 27 விளக்குகளை எங்கெங்கு ஏற்ற வேண்டும் தெரியுமா

: கார்த்திகை தீபத்திருவிழா நாளில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் நமது வீட்டில் இன்று 27 தீபங்களை ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம்.

Google Oneindia Tamil News

சென்னை: கார்த்திகை தீபத்திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. நமது வீட்டில் 27 விளக்குகள் ஏற்றுவது ஐதீகம். 27 விளக்குகள் ஏற்றினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றிய உடன் அனைவரின் இல்லங்களிலும் தீபங்களை ஏற்றலாம். இன்றைக்கு பரணி நட்சத்திரம் உள்ளதால் நம்முடைய வீட்டில் இன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு மேல் தீபம் ஏற்ற நல்ல நேரமாகும்.

இன்றைய தினம் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நம் இல்லங்களில் மட்டுமல்ல உள்ளங்களிலும் மகாலட்சுமி குடியேறுவாள். செல்வ வளம் பெருகும் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றார்.

திமுகவுக்கு தாவிய 3 அதிமுக ஒன்றியச் சேர்மன்கள்; கோட்டைவிட்ட தங்கமணி; பின்னணி என்ன? திமுகவுக்கு தாவிய 3 அதிமுக ஒன்றியச் சேர்மன்கள்; கோட்டைவிட்ட தங்கமணி; பின்னணி என்ன?

நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மை படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.

தீபம் ஏற்றி வழிபாடு

தீபம் ஏற்றி வழிபாடு

கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு நாம் செய்யும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக வீட்டின் வெளியிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

தீபங்கள்

தீபங்கள்

கார்த்திகை தீபம் அன்று ஏற்றக்கூடிய அகல் விளக்குகள் புத்தம் புதியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே நீங்கள் ஏற்றிய விளக்குகளை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தலைவாசலில் ஏற்றக்கூடிய இரண்டு விளக்குகள் மட்டும் புதிதாக இருப்பது மிகவும் நல்லது. மற்ற விளக்குகள் பழையதாக இருக்கலாம் தவறில்லை. விரிசல் இல்லாமல், உடையாத நல்ல அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது முறையாகும்.

தீப ஒளியின் வெளிச்சம்

தீப ஒளியின் வெளிச்சம்

அகல் விளக்குகளை மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்துக் கொண்டு பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தி நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தீபத்திலிருந்து மற்ற தீபங்களை ஏற்றுவது தான் கார்த்திகை தீபத்தின் சிறப்பம்சம்.

இறைவன் அருள்

இறைவன் அருள்

பெரிய அகல் விளக்கில் முதலில் ஒரு தீபத்தில் தீக்குச்சியால் ஏற்றி வைத்து விட்டு பின்னர் மற்ற தீபங்களை அந்த முதல் தீபத்தில் ஒளிரும் ஜோதியில் இருந்து ஏற்றி வர வேண்டும். இதன் மூலம் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தீபத்தில் ஒளி பரவி நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும்.

வாசல்களில் தீபம்

வாசல்களில் தீபம்

இன்றைய தினம் பரணி, நாளைய தினம் கார்த்திகை நாளை மறுநாள் ரோகிணி எனவே இன்று முதல் சனிக்கிழமை வரைக்கும் நாம் தீபம் ஏற்ற வேண்டும். நம்முடைய வீட்டில் எங்கும் இருளே இல்லாதபடி நிறைய அகல் விளக்குகளை ஏற்றுங்கள். வீட்டில் இருக்கும் அனைத்து வாசல்களிலும் தீபம் ஏற்ற வேண்டும்.

சமையல் அறையில் தீபம்

சமையல் அறையில் தீபம்

தலைவாசலில் புதிய அகல் விளக்குகள் கொண்டு தீபமேற்ற வேண்டும். பின்னர் மறந்து விடாமல் சமையலறையிலும் விளக்கேற்றுவது அவசியம். சமையல் அறையில் நிச்சயம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பால்கனி, வராண்டா, மாடிப்படிகளில் கோலம் போட்டு தீபம் ஏற்றலாம். துளசி செடிக்கு ஏற்றுங்கள். நெல்லி, மாதுளை இருந்தால் நிச்சயம் ஏற்றி வைக்க வேண்டும் இந்த மரங்கள் மகாலக்ஷ்மி அம்சம் கொண்டவை. தீபத்திருநாளில் தீபம் ஏற்றி வழிபட நம் இல்லத்தில் அன்னை மகாலட்சுமி குடியேறுவாள் என்பது நிச்சயம்.

English summary
Karthika Deepam Festival is celebrated on Friday. Worship by lighting a lamp is special. Loading 27 lights in our house is iconic.Today is Barani star so it is a good time to light the lamp in our house above 5.30 pm today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X