2021ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் - இந்தியாவில் எந்தெந்த பகுதிகளில் பார்க்கலாம் - தோஷம் உண்டா

இந்தியாவில் சந்திரன் உதயமானதும் சிறிது நேரத்துக்கு பகுதியளவு சந்திர கிரகணத்தை, சிக்கிம் தவிர்த்து வடகிழக்குப் பகுதிகள், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் சில கடற்கரைப் பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திர கிரகணத்தை நாட்டில் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை காண முடியும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிக்கிம் தவிர்த்து வடகிழக்குப் பகுதிகள், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் சில கடற்கரைப் பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் காணலாம்.

சூரியன் - பூமி - சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது பூமியின் நிழல், சந்திரனின் மீது விழுவதால் சந்திர கிரகண நிகழ்வு ஏற்படுகிறது. பொதுவாக சந்திர கிரகணம் பெளர்ணமி தினத்தில் வரும். ஒரு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏற்படும். 2021ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 26ம் தேதி புதன் கிழமை ஏற்படுகிறது.

சந்திரன் உதயமானதும் சிறிது நேரத்துக்கு பகுதியளவு சந்திர கிரகணத்தை, சிக்கிம் தவிர்த்து வடகிழக்குப் பகுதிகள், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் சில கடற்கரைப் பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் காணலாம்.

இந்தியாவில் எங்கு தெரியும்

இந்தியாவில் எங்கு தெரியும்

மத்திய புவி அறிவியல் அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், பகுதியளவு சந்திர கிரகணத்தை நாட்டில் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை காண முடியும் என்று தெரிவித்துள்ளது. நாளை மாலை சந்திரன் உதயமானதும் சிறிது நேரத்துக்கு பகுதியளவு சந்திர கிரகணத்தை, சிக்கிம் தவிர்த்து வடகிழக்குப் பகுதிகள், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் சில கடற்கரைப் பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் காணலாம்.

எந்த நேரத்தில் கிரகணத்தைப் பார்க்கலாம்

எந்த நேரத்தில் கிரகணத்தைப் பார்க்கலாம்

சந்திர கிரகணம் மாலை 3.15 மணிக்குத் தொடங்கி 6.23 மணிக்கு முடியும். அதேநேரம் முழு சூரிய கிரகணம் மாலை 4.39 மணிக்குத் தொடங்கும். அதை தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியாவின் சில நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணமுடியும்.

 2வது சந்திர கிரகணம் நவம்பர் 19

2வது சந்திர கிரகணம் நவம்பர் 19

இந்தியாவின் மற்ற பகுதிகளில் இந்த கிரகணம் தெரியாது. கிரகணம் தெரியாத இடங்களில் தோஷம் கிடையாது. நாளை ஏற்படும் சந்திர கிரகணத்துக்குப் பின் இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணத்தை இந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி காணலாம். இந்த சந்திர கிரகணம் இந்தியாவிலும் தெரியும். இந்த கிரகணத்தை இந்தியாவில் அருணாச்சல் பிரதேசம் மற்றும் அசாமின் சில பகுதிகளில் நிலவொளியில் காணலாம்.

2 சூரிய கிரகணம்

2 சூரிய கிரகணம்

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 10 ஆம் தேதி நிகழ உள்ளது. இது ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும். இந்த கிரகணம் ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களில் ஆசியா, ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் பெரும் பகுதிகளில் ஏற்படும். இந்த கிரகணம் இந்தியாவில் முழுமையாகத் தெரியாது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 4 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழும். இந்த சூரிய கிரகணமும் இந்தியாவில் தெரியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+