மதுரை அரசாளும் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் கோலாகலம் - செங்கோல் ஏந்திய அழகை தரிசித்த பக்தர்கள்
மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ராயர் கிரீடம் கூட ரத்ன செங்கோல் ஏந்தி பட்டத்தரசியாக முடிசூட்டப்பட்டதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை: சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சமான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடைபெற்றது. செங்கோல் ஏந்தி பட்டத்தரிசியாய முடிசூடிய மீனாட்சி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரையில் இன்று முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சி ஆட்சி நடைபெறும் என்பது ஐதீகம்.
உலகப்புகழ் பெற்ற சித்திரைத்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பிரியா விடை அம்மனுடன் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகின்றனர். ஐந்தாம் நாளன்று தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். மீனாட்சி அம்மன் வேடத்திலும் கள்ளழகர் வேடத்திலும் சிறுவர் சிறுமியர் அழகாக காட்சி அளித்தனர்.
ஏழாம் நாளன்று யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருள, அதிகார நந்தி வாகனத்தில் அருள்பாலித்தார் சுந்தரேஸ்வரர். நேற்றைய தினம் மதுரை மாநகரில் நல்ல மழை பெய்த காரணத்தால் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெறவில்லை.

மழையில் சாமி அம்மன் புறப்பாடு இல்லை
கனமழை காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் நவசக்தி மண்டபத்தில் காட்சி அளித்தனர். ஆகம விதிப்படி மழையில் புறப்பாடு நடைபெறக்கூடாது என்கிறார் மீனாட்சி அம்மன் கோவில் குருக்கள் அசோக் பட்டர். அதிக வெயிலோ, அதிக மழையோ உற்வசர் விக்ரகங்களைப் பாதிக்கக் கூடாது என்பதனால்தான் குடை பிடிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார் அசோக் பட்டர்.

இன்று பட்டாபிஷேகம்
மதுரை மீனாட்சி அம்மனுக்கு சித்திரை திருநாள் நடைபெறும் பத்து நாட்களும் விதம் விதமான நகைகளை அணிவித்து அழகு பார்ப்பார்கள். அதுவும் பட்டாபிஷேகத்தன்று கொஞ்சம் கூடுதல் நகைகளால் அலங்கார ரூபினியாய் காட்சி தருவார் மீனாட்சி அம்மன். இந்த ஆண்டு பட்டாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்புடன் இன்று கோலாகலமாக நடைபெற்றது. வெள்ளி சிம்மாசனத்தில் அலங்காரமாக பட்டத்தரசியாக மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தாலான செங்கோல் வழங்கப்பட்டு பட்டாபிஷேகம் நடைபெற்றது. ஹம்பி நகரத்து மன்னர் ராயர் வழங்கிய கிரீடத்தை சூடிக்கொண்டு பட்டத்தரசியாக ஜொலிக்கும் மீனாட்சி தரிசித்தாலே போதும் பிறவிப்பயன் கிடைத்து விடும் என்பதால் ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். மீனாட்சி அம்மன் பிறப்பு முதல் திருக்கல்யாணம் வரைக்கும் நடந்தவற்றை நமது ஒன் இந்தியா வாசகர்களுக்காக கூறியுள்ளார் அசோக் பட்டர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
இந்திர பதவியை அடைவதற்காக கடும்தவம் செய்து கொண்டிருந்த விஸ்வரூபன்-விருத்திகாசுரர் ஆகிய அசுரர்களை தேவேந்திரன் கொன்றான். இதனால் பிரம்மஹத்தி தோஷம் தேவந்திரனைப் பற்றியது.
கேதாரம், காசி, காஞ்சி முதலான பல ஷேத்திரங்களாலும் தீராத தோஷம் கடம்பவன சொக்கலிங்கப் பெருமானால் தீர்ந்தது. இதனால், மகிழ்வுற்ற தேவேந்திரன், தேவதச்சர்களின் தலைவனான மகாசிற்பி மயனைக் கொண்டு கோயில் அமைத்து கடம்பவன மதுரையிலேயே சொக்கலிங்க வடிவில் ஈசனை வழிபட்டான்.

இந்திர விமான கோவில்
அந்த நாளிலே மணவூரைத் தலைநகராகக் கொண்டு நாட்டை ஆண்டு வந்த குலசேகர பாண்டிய மன்னன், தனஞ்செயன் என்ற வணிகனால் கடம்பவனத்திலுள்ள சொக்கேசனின் கோயிலைப் பற்றி அறிந்து சென்று வணங்கினான். நள்ளிரவில் இந்திரன் முதல் தேவர்கள் எல்லாரும் வந்து வணங்கிச் செல்லும் அந்தக் கோயிலை ஆகம விதிப்படி அற்புதக் கோயிலாக உருவாக்கினான். நாற்புறமும் எட்டு யானைகள், 32 சிங்கங்கள் 64 சிவகணங்கள் தாங்கும் இந்திரவிமானக் கோயில் இதுவாகும்.

மீனாட்சி அம்மன் அவதாரம்
குலசேகர பாண்டியனின் வழித் தோன்றலான மலையத்துவஜ பாண்டியன் பாண்டிய நாட்டை ஆள்கிறான். இவனது மனைவி காஞ்சனமாலை சோழமன்னனின் மகள். இவள் முற்பிறவியில் மீனாட்சியம்மையைப் பிரார்த்தித்து அம்மனையே மகளாக அடையும் வரத்தைப் பெற்றிருந்தாள். மலையத்துவஜன் - காஞ்சனமாலை தம்பதிக்கு குழந்தைப் பேறு இல்லாததால் இவர்கள் 99 அஷ்வமேத யாகம் நடத்தினர். பின்னர் இந்திரன் சொல் கேட்டு புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினர். அந்த யாகத்தீக்குள்ளிருந்து மூன்று வயதுச் சிறுமியாக ஈஸ்வரி மீனாட்சி உருவில் நடந்து வந்து காஞ்சன மாலையின் மடியில் அமர்ந்து அம்மா என்று அழைத்தாள்.

தடாதகை
யாகத்தின் மூலமாகக் கிடைத்த தெய்வீகக் குழந்தைக்கு மூன்று தனங்கள் இருந்தன. இதைக் கண்டு அரச தம்பதி அதிர்ந்தனர். மன்னா வருந்தாதே இக்குழந்தைக்கு தடாதகை என்று பெயரிட்டு வளர்த்துவா!. பருவவயதில் அவள் தனக்கேற்ற கணவனைக் காண்பாள். அப்போதே மூன்றாவதாக உள்ள தனம் மறைந்துவிடும்" என்று அசரீரி ஒலித்தது. வில் பயிற்சி, வாள் பயிற்சி கற்றுக்கொடுத்து வீர பெண்மணியாக வளர்த்தார்.

பட்டத்தரசியாக முடிசூட்டல்
ஆயகலைகள் அனைத்திலும் தேர்ந்து வீரமிக்க பெண்ணாக வளர்ந்த தடாதகைக்கு பட்டத்தரசியாக மணி மகுடம் சூட்டப்பட்டது. பாண்டியர்களின் வெற்றி மலரான வேப்பம்பூ மாலையும் அணிவிப்பது சிறப்பு. வீராபிஷேகம், விஜயாபிஷேகம் செய்வார்கள். மகுடாபிஷேகம் செய்யும் போது வேப்பம்பூ மாலை சூடுவது சிறப்பு. பட்டத்தரசியான நாள் முதல் தனது நாட்டு மக்களை கண்களால் காத்து வருவதால் மீனாட்சி என்று அழைக்கப்படுகிறார். மதுரை மாநகரமே தூங்க நகரமாக திகழ்கிறது.
Recommended Video

திக் விஜயமும் திருக்கல்யாணமும்
மதுரை அரசி தடாதகைப்பிராட்டி திக்விஜயம் செய்தாள். பல நாடுகளையும் தனது குடையின் கீழ் கொண்டு வந்தார். ஐம்பத்தியாறு தேச மன்னர்களையும், அஷ்டதிக்குப் பாலகர்களையும் பணியச்செய்தாள். கயிலாயத்திற்கே படை நடத்திச் சென்றபோதுதான் அந்த அதிசயம் நடந்தது. அங்கே சிவபெருமானை கண்ட உடன் நாணம் தோன்றியது. ஈசனைப் பார்த்ததும், இயல்புக்கு மாறாக இருந்து வந்த மூன்றாவது தனம் மறைந்தது. மதுரையம்பதிக்கு பெண் கேட்டு வந்து மணம் முடிப்பேன் என்று தடாதகையிடம் வாக்களித்தார். சொன்னது போல தனது பரிவாரங்களுடன் சுந்தரேஸ்வரராக வந்து மீனாட்சியின் கரம் பிடித்தார். நாளை மறுநாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications