சிவன் சொத்து குல நாசம் என தெரியாதா? மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிலம் போராட்டத்திற்கு பின் மீட்பு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் சொத்துக்கள் சக்குடி அருகே மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இடத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் என்றும் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
மதுரை என்று சொல்லும்போது முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். புகழ்மிக்க ஒரு புன்னியஸ்தலம். வெளிநாட்டில் இருந்து தமிழகத்தை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணிகள், தமிழகத்தில் உள்ள மீனாட்சி கோவிலுக்கு வாராமல் இருக்க மாட்டார்கள்.
இந்த கோவிலுக்கு நகைகள், பொக்கிஷங்கள் மற்றும் நிலப்பட்டாக்கள் என்று அளவிட முடியாத சொத்து உண்டு. இந்த கோவிலின் நகைகள் அனைத்தும் விலை உயர்ந்தவை.

கோவில் நிலம் குத்தகை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிறைந்துள்ளன. இதனை குத்தகை அடிப்படையில் ஏராளமானோர் அனுபவித்து வருகின்றனர். பலர் கோவில் சொத்தை விற்பனை செய்து ஏப்பம் விட்டு விடுகின்றனர். கோவில் சொத்துக்கள் கண்டறியப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையினரால் மீட்கப்பட்டு வருகின்றன.

கோவில் சொத்துக்கள் மீட்பு
கடந்த சில மாதங்களுக்கு மதுரை சிம்மக்கல் அனுமார்கோயில் படித்துறை அருகே மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 1366 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடத்தை வணிக பயன்பாட்டிற்காக குணசேகரன் என்பவர் கோயில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டிருந்தது. அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வுசெய்தபொழுது கோயில் இடத்தை சட்டவிரோதமாக ராஜேந்திரன் என்பவர் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த இடத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து கழிப்பறை, குளியலறை கட்டணம் வசூல் செய்தும், உணவகம் அமைத்தும் நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி தொகையை 3 லட்சத்து 91ஆயிரத்து 768 ரூபாயை செலுத்தக் கோரி கோயில் நிர்வாகத்தின் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கடைகளுக்கு சீல்
கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வணிக பயன்பாட்டிற்கு உள்வாடகைக்கு விட்டது. தெரியவந்தது இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற கோயில் அதிகாரிகள் 1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான 1366 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை மீட்டனர். மேலும் அந்த கடைகளுக்கு சீல் வைத்து அங்கு உள்ள அறையில் இருந்த ஒரு அடி நீள பித்தளை சூலம், கையடக்க கலசம், விபூதி கொப்பரை ஆகியவற்றை மீட்டுச் சென்றனர்.

கோவில் நன்செய் நிலம்
மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் உள்ள நிலங்களை மதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு ருத்ரஜெபம் செய்யவும், அபிஷேகத்திற்கு தயிர் வழங்குவதற்காகவும் மன்னர்கள் வழங்கினார்கள். அதில் 1 ஏக்கர் 25 சென்ட் நிலத்தை தட்சிணாமூர்த்தி என்பவர் பராமரித்து அதில் வரும் வருமானத்தை கோவில் ருத்ரஜெபம் செய்வதற்காக வழங்கி வந்துள்ளார்.

கோவிலுக்கு தயிர்
அதே போன்று 75 சென்ட் நிலத்தை மூக்கக்கோனார் என்பவர் பராமரித்து அதில் வரும் வருமானம் மூலம் கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிஷேகத்திற்காக தயிர் வழங்கி வந்தார். இவர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இந்த செயல்களை செய்து வராமல் இருந்துள்ளனர். மேலும் கோவிலுக்கு வழங்கப்பட்ட இடத்தை வேறு சிலருக்கு விற்பனையும் செய்து விட்டனர். இதை அறிந்த மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. மேலும் மதுரை ஹைகோர்ட்டிலும் வழக்கு நடந்து வந்தது.

கோவில் சொத்து மீட்பு
இந்த நிலையில் அந்த இடத்தை மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் பட்டா வழங்க கோர்ட்டு உத்தரவின் பேரில் மதுரை வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி வருவாய்த்துறையினர் கோவில் பெயரில் பட்டா வழங்கினார். அதை தொடர்ந்து கோவில் துணை ஆணையர் அருணாசலம் மற்றும் அதிகாரிகள் சக்குடிக்கு சென்று அந்த நிலத்தை கோவிலுக்கு சொந்தமானது என்று பெயர்பலகை வைத்தனர்.

சிவன் சொத்து குல நாசம்
இதன் மூலம் சக்குடியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. சிவன் சொத்து குல நாசம் என்று தெரிந்தும் பலரும் கோவில் சொத்துக்களை அபகரித்து ஏப்பம் விடுகின்றனர். மீட்கப்பட்ட இடத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் என்றும் பலகையும் வைக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications