மீன ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
மீன ராசி அன்பர்களே! சிறப்புகள் தேடி வரும் நாள். பழைய கவலைகள் நீங்கும். நன்மைகள் பெருகும். வியாபாரத்தில் மிகுந்த லாபம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வு கிட்டும். சிலருக்கு பதவி மாறுதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. ஆட்சியாளர்கள் மூலம் நன்மை ஏற்படும். மனைவி மக்கள் சந்தோஷமாக இருப்பதால் குடும்பம் குதூகலத்துடன் திகழும். வடக்கு திசையில் இருந்து மிக நல்ல செய்தி உங்களுக்கு வந்து சேரும்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு தன வரவு அதிகரிக்கும் .
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் யோக பலன்கள் உண்டாகும்.
ரேவதி நட்சத்திரக்காரர்கள் காரியங்கள் கைகூடும்.
இன்று உங்கள் பலம்:
நிதானத்தோடும் மதிநுட்பத்தோடும் காரியங்களில் இறங்குவீர்கள். தடைகளை தாண்டக்கூடிய வியூகம் அமைப்பீர்கள்.
இன்று உங்கள் பலவீனம்:
சில நேரங்களில் ஞாபக மறதி பாடாய்படுத்தும். எந்த இடத்தில் பொருளை வைத்தோம் என்று தடுமாறுவீர்கள்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 அந்நிய பெண்களிடம் நெருக்கமாக உறவாட வேண்டாம்.
2 தொலைபேசியில் வரும் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம்.
3 வரவுக்கு மீறி செலவுகள் செய்ய வேண்டாம்.
அதிர்ஷ்ட எண்: 8,5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்.
வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
உங்கள் ஜோதிடர், கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி.
தொலைபேசி எண்: 9942987859
| தேதி | 20 - புரட்டாசி - பராபவ வருடம் புதன் |
| நாள் | புதன் |
| திதி | துவாதசி (up to 11:17 pm) திரயோதசி (up to October 08, 10:16 pm) |
| நட்சத்திரம் | மகம் (up to 9:40 pm) பூரம் (up to October 08,9:20 pm) |
| யோகம் | சித்த-அமிர்த யோகம் |
| நல்ல நேரம் | 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm |
| கௌரி நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm |
| இராகு காலம் | மதியம் 12.00 - 1.30 |
| எமகண்டம் | காலை 7.30 - 9.00 |
| குளிகை | காலை 10.30 - 12.00 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | உத்திராடம், திருவோணம் |
| சூரியோதயம் | 6:02 AM |
| சூரிய அஸ்தமனம் | 5:51 PM |
| சந்திரோதயம் | Oct 07 2:51 AM |
| சந்திர அஸ்தமனம் | Oct 07 3:36 PM |