ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2023: பண மழையில் நனையப்போகும் ரிஷப ராசிக்காரர்களே..கவனம் தேவை
சென்னை: 2023ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகிறது. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள், யாருக்கு யோகங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கப்போகிறது என்று பார்க்கலாம். ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் 1,2ஆம் நட்சத்திர பாதங்களில் பிறந்தவர்களின் யாருடைய வீட்டில் அன்னை மகாலட்சுமியின் அருள் பார்வை கிடைக்கப்போகிறது..பண மழையில் நனையப்போவது யார் என்று பார்க்கலாம்.

2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறக்கப்போகிறது. கேதுவின் நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கிறது. குரு மீன ராசியில் ஆட்சி பெற்றிருக்க, சனி பகவான் மகர ராசியில் சுக்கிரன் உடன் சேர்ந்திருக்க,தனுசு ராசியில் புதன் வக்ர நிலையில் சூரியனுடன் இணைந்திருக்கிறார். மேஷ ராசியில் ராகு சந்திரன், ரிஷப ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இது பொது பலன்தான் இந்த புத்தாண்டில் அவரவர் தசாபுத்தி படி ராசிபலன்களில் சில மாறுதல்கள் வரலாம். ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை 2,3,4ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எடுத்த காரியங்களை தைரியமாக முடிப்பீர்கள். சூரியன் உங்கள் நட்சத்திர அதிபதி. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் புதிய பதவிகள் தானாக தேடி வரும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்,சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரங்களில் அதிக அளவு முதலீடு செய்யாமல் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவது அவசியம். சிலர் படிப்பிற்காக வெளியூர், வெளிநாடு சென்று படிக்க வேண்டியிருக்கும். பெண்கள், இல்லத்தரசிகளுக்கு மன நிம்மதியும் உற்சாகமும் நிறைந்த ஆண்டாக அமையும். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்வதால் புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த புத்தாண்டு மிகப்பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்தப்போகிறது. சந்திரன் உங்கள் நட்சத்திர அதிபதி. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல தனவரவு உண்டாகும். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த சுப காரியங்கள் நல்ல முறையில் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். தொழில் செய்வர்கள் வியாபாரிகளுக்கு செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் அதிகரிக்கும். வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும். தைரியமாக முதலீடுகள் செய்யலாம். மே மாதத்திற்குப்பிறகு கவனமும் விழிப்புணர்வும் அவசியம். தலைமைப் பதவிகள் தேடி வரும். பொருளாதார நிலை வளர்ச்சி அடையும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். சிவ ஆலய தரிசனம் மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் தேடி தரும்.
மிருகசீரிடம் 1,2ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பகவான் உங்கள் நட்சத்திர அதிபதி. இந்த ஆண்டு வேலையில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உழைப்பு அதிகரிக்கும். பதவி உயர்வு தேடி வரும். உங்களின் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது. உறவினர்கள் சொந்தங்களுடன் உற்சாகமாக ஆன்மீக தலங்களுக்கு யாத்திரை கிளம்புவீர்கள். தொழில் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. புது வீடு கட்டி குடியேறப்போகிறீர்கள். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிக்க பொறுமையும் நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டியிருக்கும். அவசரப்பட்டு எதையும் செய்யப்போய் சிரமத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். பெண்கள் துடுக்குத்தனமாக பேசி சண்டை, சச்சரவில் சிக்கிக்கொள்ள வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உங்கள் குடும்ப விசயங்களில் மூன்றாவது நபரை தலையிட விட வேண்டாம். இந்த ஆண்டு லட்சுமி நரசிம்மரை வழிபட கடன் பிரச்சினைகள் எதிரிகள் தொந்தரவுகள் நீங்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications